கம்பராமாயணம் 137 · பால 3.56

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவ, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தம் ஏ.

பொருள் · Meaning in Tamil

சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள் - மாலை சூடிய மகளிர் (வாடிவிட்டன என்று) இகழ்ந்து எறிந்துவிட்ட மாலைகள்; ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன - ஆடுகின்ற நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும்; ஊடல் ஊடு உறக் கூடுவார் - புலவி இடையிலே நிகழ, பின் ஆடவருடன் கூடி மகிழும் மகளிர்; வனமுலை கொழித்த சாந்தம் - அழகிய தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை; ஓடுவார் இழுக்குவது - அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்வனவாம்.

மகளிர் தாம் அணிந்த மாலைகள் வாடினவென வீசியெறிய அவை குதிரைகளின் கால்களைப் பிணிக்கும். அம்மகளிர் வழித்து எறிந்த சந்தனக் குழம்பு வீதியில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்யும். குரம்: குளம்பு. ஆர்த்தல்: பிணித்தல் (கட்டுதல்). “கோதை மடவார்தம் கொங்கை மிசை திமிர்ந்த சீதக் களபச் செழுஞ் சேற்றால் வீதிவாய் மானக்கரி வழுக்கும்” என்ற நளவெண்பா ஒப்பு நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hanging garlands scorned by the women who wore them
  2. bind the hooves of the dancing horses;
  3. and the sandal paste scraped from the lovely breasts of women who, after a quarrel,
  4. make up with their lovers, makes those who run slip.

What the poem says

Two images of luxury in the streets. The women throw away their garlands as soon as they wilt, and the discarded flowers tangle the hooves of the prancing horses.

After lovers' quarrels and reconciliations, the sandal paste wiped from their bodies lies so thick in the streets that passers-by slip on it. A similar image in the later poem Naḷaveṇpā is cited for comparison.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭu vār puraviyiṉ kurattai ārppaṉa,
cūṭuvār ikaḻnta at toṅkal mālaikaḷ;
ōṭuvār iḻukkuvatu, ūṭal ūṭu uṟak
kūṭuvār vaṉa mulai koḻitta cāntamē.