கம்பராமாயணம் 1361 · பால 22.24

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்னா - என்று சொல்லி வேண்டி; அடி விழுவானையும் - (தன்) பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்ற தசரதனையும்; இகழா - இகழ்ந்து (ஒரு பொருளாக மதியாமல்); எரி விழியா - தீ சிந்துமாறு விழித்து நோக்கி; பொன் ஆர்கலை அணிவான் எதிர் - பொன்னாலாகிய பீதாம்பர ஆடையை அணிந்துள்ள இராமபிரானது எதிரிலே; புகுவான் நிலை உணரா - செல்பவனாகிய பரசுராமனின் (கொடிய) நிலைமையையுணர்ந்து; தன்னால் ஒரு செயலின்மையை நினையா - தன்னால் இயலக்கூடிய செயல் ஒன்றும் இல்லாமையை நினைத்து; உயிர் தளரா - உயிர் தளர்ந்து; மின்னால் அயர்வுறும் வாள் அரவு என - மின்னலினால் தளர்ச்சியுறும் கொடிய பாம்பு போன்று; வெய்துறல் உற்றான் - (மனம்) வெதும்புதல் அடைந்தான் (தசரதன்).

என்னா, இகழா, விழியா, உணரா, நினையா, தளரா என்னும் செய்யா என்னும் எச்சங்கள் உடன்பாட்டுப் பொருளைத் தந்து உற்றான் எனும் வினை முடிபு கொண்டன. அடிவிழுவானையும் என்பதில் உள்ள உம்மை அடிவிழுவானைப் புறக்கணிக்கவும் ஒரு முனிவனால் எப்படி முடிந்தது எனும் வியப்புத் தோன்றுமாறு நின்றது. சம்பராசுரனை வென்ற தோளாற்றல் வாய்ந்த தசரதன், தவத்தின் ஆற்றலின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தான் என்பது தோன்ற, “தன்னால் ஒரு செயலின்மையை நினையா” என்றார். மின்னலின் ஒளி பாம்புகளை மிகப் பாதிக்கும் என்பது மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had spoken, seeing the sage scorn even him who lay at his feet, glare with fiery eyes,
  2. and go up to face the one who wore the golden cloth, and grasping how things stood,
  3. and thinking that there was nothing he himself could do, his life ebbing away,
  4. the king burned with anguish, like a fierce snake stunned by the lightning.

What the poem says

Paracurāmaṉ ignores the prostrate king and strides toward Irāmaṉ, who wears golden silk. Tacarataṉ, who once defeated the demon Camparaṉ by the strength of his arms, realises he is powerless against the power of penance.

Tradition holds that lightning stuns and weakens snakes, so the king is compared to a snake struck by its flash. The commentary also notes the wonder in the word "even": how could a sage spurn a man lying at his feet?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉā, aṭi viḻuvāṉaiyum ikaḻā, eri viḻiyā,
poṉ ār kalai aṇivāṉ etir pukuvāṉ nilai uṇarā,
taṉṉāl oru ceyal iṉmaiyai niṉaiyā, uyir taḷarā,
miṉṉāl ayarvuṟum vāḷ aravu eṉa, veytuṟal uṟṟāṉ.