கம்பராமாயணம் 1377 · பால 22.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணிய மணிநிற வண்ண! - “கழுவித் தூய்மை செய்யப் பெற்ற நீல மணியின் நிறமுடைய இராமனே!; வண்துழாய்க் கண்ணிய! - அழகிய துழாய் மாலையணிந்தவனே!; யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணிய! - (மூவுலகங்களிலும் வாழ்கின்ற) அனைவர்க்கும் புகல் இடமாகிற புண்ணியனே!; எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக! - நீ, கருதி வந்துள்ள பொருள்கள் எல்லாம் (கருதியவாறே) இனிதே நிறைவேறுவனவாகுக; விடை எனத் தொழுது போயினான் - யான் விடை பெறுகின்றேன்” என்று கூறி வணங்கிச் சென்றான் (பரசுராமன்).
நீல மணி வண்ணமும் பைந்துழாய்க் கண்ணியும் உடைய நீ சரணாகதி வத்சலன் ஆகிய பரம்பொருளே. இனி, உலகு உன்னால் நலம் அனைத்தும் பெறும். நான் பெற வேண்டியது விடை எனப் பரசுராமன் விடை பெற்றனன் என்க. மண்ணுதல்: கழுவுதல், நீராட்டுதல். “மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை” (குறுந். 292) “மண்ணி வாரா அளவை” (புறம். 50). களைகண்: புகலிடம், சரணாகதி நல்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'May all that you have purposed come to a happy end!
- You who have the colour of a washed sapphire! You who wear
- the rich garland of tulasi! Holy one, refuge of all beings!
- Give me leave.' So saying, he bowed in worship and went away.
What the poem says
Paracurāmaṉ, humbled, takes his leave as a devotee. He addresses Irāmaṉ by the marks of Viṣṇu, the deep blue of a freshly washed sapphire and the garland of tulasi leaves, and calls him the refuge of all who surrender to him.
He blesses whatever Irāmaṉ has come into the world to do, and asks for nothing but leave to go.