கம்பராமாயணம் 1411 · அயோத்தியா 1.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“இழைத்த தொல் வினையையும் - ஒருவன் செய்த பழமையான வினைகளின் பயன்களையும்; கடக்க எண்ணுதல் - தாண்டிச்செல்லக் கருதுவது; தழைத்தபேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் - மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால் உண்டாகுமானால், (அத்தவத்தினைச் செய்யாது); குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி - இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி; வேறுஅழைத்த தீ விடத்தினை - அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட கொடிய நஞ்சினை; அருந்தல் ஆகுமோ - நுகர்தல் தகுமோ? (தகாது)”
அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது போலத் தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது கருத்து. “தவத்தினைச் செய்யாமல் அரசவாழ்வை மேற்கொண்டிருத்தல்” என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும் கூறியதனால் இது ஒட்டணி ஆகும். கோரம் - வட்டில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If the hope of passing beyond even the deeds one wrought long ago
- can be fulfilled by penance, rich in abounding grace,
- should one push away the bowl of nectar richly blended
- and drink instead the deadly poison named as its opposite?'
What the poem says
Penance, which can free a person even from the results of past deeds, is like a bowl of sweet nectar; clinging to royal life instead would be like setting that bowl aside to drink poison.
The poet gives only the comparison and leaves the thing compared unspoken, a figure the commentary names oṭṭaṇi.