கம்பராமாயணம் 1412 · அயோத்தியா 1.25

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கச்சை அம் கடக்கரி - கயிறு பூண்ட அழகிய மத யானையினது; கழுத்தின்கண் உற - கழுத்தில் பொருந்த; பிச்சமும் கவிகையும் பெய்யும் - பீலிக் குஞ்சமும் வெண் கொற்றக் குடையும் தருகின்ற; இன் நிழல் - இனிய நிழலின்கண் இருந்து ஆளும் வாழ்வு; நிச்சயம் அன்று எனின் - என்றும் நிலைக்கக்கூடியதன்று என்றால்; நெடிது நாள் உண்ட எச்சிலை - நெடுங்காலமாக நுகர்ந்துவந்த எச்சில் போன்ற அதனை; நுகருவது - மேலும் துய்ப்பது; இன்பம் ஆகுமோ - இன்பம் தருவதாகுமோ? (ஆகாது).”

நிலையாத அரச இன்பத்தை விடுத்து நிலைத்த இன்பம் நல்கும் துறவினை நாடுவது சிறப்பு என்பது கருத்து.

“ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ” (திருவாய்மொழி, 4:1:1)

என்பர் நம்மாழ்வார்.

பிச்சமும் கவிகையும் அரச சின்னங்கள். நிழல் - ஈண்டுக் குடைநிழலில் இருந்து ஆளும் அரச போகத்தைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'On the neck of the lovely rutting elephant with its girth-rope,
  2. the sweet shade shed by feather-fan and royal umbrella,
  3. if it does not last, then to taste again what one has long since eaten,
  4. those leavings, can that be any joy?'

What the poem says

The insignia of royalty, the feather whisk and white umbrella held over a king riding his elephant, stand for the pleasures of power. Those pleasures do not last, and after long enjoyment they are like the leftovers of a finished meal.

The commentary quotes Nammāḻvār: kings who once ruled the whole world end as beggars with broken pots, their legs bitten by dogs, so think on Nārāyaṇa's feet while there is still time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaccai am kaṭak karik kaḻuttiṉkaṇ uṟap
piccamum kavikaiyum peyyum iṉ niḻal
niccayam aṉṟu eṉiṉ, neṭitu nāḷ uṇṭa
eccilai nukaruvatu iṉpam ākumō?'