கம்பராமாயணம் 1418 · அயோத்தியா 1.31

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திரண்ட தோளினன் - பருத்த தோள்களை உடைய தயரத மன்னன்; இப்படிச் செப்பலும் - இவ்வாறு கூறவும்; சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் - (மந்திரக் கிழவர்) மனத்தினின்று பொங்கி மேலிட வழிந்த மகிழ்ச்சியை உடையவர்களாய்; ஆங்கே - அதே நேரத்தில்; மன்னவன் பிரிவு எனும் - தயரதன் பிரிவு என்கிற; விம்முறு நிலையால் வெருண்டு - இரங்குதற்குரிய நிலைமையால் மனம் கலங்கி; இரண்டு கன்றினுக்கு - இரு கன்றுக்குட்டிகளுக்காக; இரங்கும் ஒர் ஆ என - மனம் இரங்கும் ஒரு பசுவைப்போல; இருந்தார் - (ஒன்றும் தெளிய மாட்டாதவராக) இருந்தனர்.

இரு கன்றுகளை உடைய பசு இரண்டில் ஒன்றை விடும் நிலை வந்தபோது எதையும் பிரிய மனம் ஒருப்படாமல் இரண்டுக்கும் இரங்குவதுபோல, தயரதன் துறத்தலையும், இராமன் அரசனாகாமல் இருத்தலையும் விரும்பாமல் இருவரையும் விட மனமின்றி இரங்கினர் என்பது வப் பொருளாகும். விம்முறல் - துன்பமுறுதல்; இரங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the king of the massive shoulders spoke thus, their hearts
  2. overturned with a joy that surged up and spilled over; and at the same moment,
  3. dismayed by the grievous thought of parting from their king,
  4. they were like a cow that grieves for two calves.

What the poem says

The ministers are torn. They are overjoyed at the thought of Irāmaṉ as king, yet stricken at the prospect of losing Tacarataṉ.

They are like a cow with two calves that must give up one and cannot bear to lose either.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiraṇṭa tōḷiṉaṉ ippaṭic ceppalum, cintai
puraṇṭu mītiṭap poṅkiya uvakaiyar, āṅkē
veruṇṭu, maṉṉavaṉ pirivu eṉum vimmuṟu nilaiyāl,
iraṇṭu kaṉṟiṉukku iraṅkum ōr ā eṉa iruntār.