கம்பராமாயணம் 1419 · அயோத்தியா 1.32

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னர் ஆயினும் - (மந்திரக் கிழவர்) அத்தன்மையராயினும்; அரசனுக்கு - தயரதனுக்கு; அது அலது உறுதி பின்னர் இல் எனக் கருதியும் - அவ்வாறு செய்வதன்றி நன்மை வேறில்லை என்று எண்ணியும்; பெரு நில வரைப்பில் - பெரிய நிலவுலகத்தில்; மன்னும் மன்னுயிர்க்கு - தங்கியிருக்கின்ற நிலைபேறுடைய உயிர்களுக்கு; இராமனின் மன்னவர் இல்லை - இராமனைப் போலச் சிறந்த அரசர் இல்லை; என்ன உன்னியும் - என்று நினைத்தும்; விதியது வலியினும் - விதியின் வலிமையாலும்; இசைந்தார் - (அரசன் கருத்துக்கு) உடன்பட்டனர்.

தயரதன் விருப்பத்தினை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. அவை: துறவு தயரதனுக்கு நன்மை தரும் என்று எண்ணியமை, இராமனைப்போன்ற சிறந்த அரசர் இல்லை என்று நினைத்தமை, இராமன் காடு செல்வதற்குரிய விதியின் வலிமை என்பன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though they felt so, thinking that for the king there could be
  2. no greater good than that, and reflecting that in all the wide earth
  3. there was no king like Irāmaṉ for the living beings who dwell there,
  4. and by the force of fate as well, they consented.

What the poem says

The ministers consent for three reasons: renunciation is truly good for the king; no one could rule the world's people as well as Irāmaṉ; and fate, already moving Irāmaṉ toward the forest, bends them to agree.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉar āyiṉum, aracaṉukku atu alatu uṟuti
piṉṉar il eṉak karutiyum, peru nila varaippil
maṉṉum maṉṉuyirkku irāmaṉiṉ maṉṉavar illai
eṉṉa uṉṉiyum, vitiyatu valiyiṉum, icaintār.