கம்பராமாயணம் 1420 · அயோத்தியா 1.33

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இருந்த மந்திரக் கிழவர் அது எண்ணமும் , தன்பால்
பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும் ,
பொருந்தும் மன் உயிர் கு உறுதியும் , பொது உற நோக்கித்
தெரிந்து , நால் மறை திசைமுகன் திரு மகன் செப்பும் .

பொருள் · Meaning in Tamil

நான்மறைத் திசைமுகன் திருமகன் - நான்கு வேதங்களையுடைய நான்முகனுக்கு மகனாகிய வசிட்டன்; இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும் - அங்குக் கூடியிருந்த அமைச்சர்களின் கருத்தையும்; மகன்பால் பரிந்த சிந்தை - மகன்மீது அன்புகொண்ட; அம் மன்னவன் கருதிய பயனும் - அந்தத் தயரதன் நினைத்த நினைப்பையும்; மன் உயிர்க்குப்பொருந்தும் உறுதியும் - அவற்றால் நிலைபெற்ற உயிர்களுக்கு உண்டாகும் நன்மையையும்; பொது உற நோக்கி - நடுவு நிலைமை பொருந்த ஆராய்ந்து; செப்பும் - பின்வருமாறு சொல்பவனானான்.

பொதுவுற நோக்கல் - விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கல். வசிட்டன் பிரமதேவனுக்கு மானச புத்திரனாதலின் அவனைத் “திசைமுகன் மகன்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The thoughts of the elders of counsel gathered there, the purpose
  2. intended by that king whose heart was full of love for his son,
  3. and the good it would bring to all the creatures of the world, he weighed without bias,
  4. and having judged, the holy son of the four-faced lord of the Vedas spoke.

What the poem says

Vaciṭṭaṉ, the mind-born son of Brahmā, weighs everything impartially: the ministers' feelings, the king's love for his son and his purpose, and the welfare of the world.

Only then does he speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irunta mantirak kiḻavartam eṇṇamum, makaṉpāl
parinta cintai am maṉṉavaṉ karutiya payaṉum,
poruntu maṉṉuyirkku uṟutiyum, potuvuṟa nōkki,
terintu, nāṉmaṟait ticaimukaṉ tirumakaṉ ceppum.