கம்பராமாயணம் 1422 · அயோத்தியா 1.35

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“புண்ணியம் தொடர் - நற்பயன் தோன்றக் காரணமான; வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணலே - யாகங்கள் எல்லாவற்றையும் செய்த பெரியோனே!; இனி அரு தவம் இயற்றவும் அடுக்கும் - நீ இனிமேல் செய்தற்கு அரிய தவத்தைச் செய்தலும் தகும்; வண்ண மேகலை நிலமகள் - அழகிய மேகலை என்னும் அணியினைப் பூண்ட பூமிதேவி; உனைப் பிரிந்து - உன்னைவிட்டுப் பிரிவதனால்; கண் இழந்திலள் என - பற்றுக்கோடு இழக்கவில்லை என்றுசொல்லும்படி; நீ தந்த கழலோன் செய்யும் - நீ பெற்ற வீரக்கழலை அணிந்த இராமன் செய்வான்.”

“புண்ணியம் தொடர்” என்னும் அடைமொழி, பிறர்க்குத் தீங்கிழைக்கும் வேள்விகளும் உண்டு என்பதனைக் காட்டியது. தயரதன் நிலமகளுக்குக் கண் போன்று இன்றியமையாதவனேயன்றிக் கண்ணாக ஆகான். ஆதலின் அவன் பிரிவால் நிலமகள் பார்க்கும் கண்ணை இழப்பாள் என்பதனினும் பற்றுக்கோடு இழப்பாள் என்பதே தகும். கண் - பற்றுக்கோடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Noble one, who have performed every sacrifice that brings merit!
  2. It is fitting now that you should take up hard penance too.
  3. The Earth with her lovely girdle, once she is parted from you,
  4. will be kept by the warrior you begot from ever losing her eye.'

What the poem says

Vaciṭṭaṉ agrees that a king who has performed every meritorious sacrifice may rightly turn to penance. The Earth, the king's consort, will not be left helpless.

"Eye" here means support or refuge: Irāmaṉ, the son Tacarataṉ has given the world, will be that support.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puṇṇiyam toṭar vēḷvikaḷ yāvaiyum purinta
aṇṇalē! iṉi arun tavam iyaṟṟavum aṭukkum'
vaṇṇa mēkalai nilamakaḷ maṟṟu uṉaip pirintu
kaṇ iḻantilaḷ eṉac ceyum, nī tanta kaḻalōṉ.'