கம்பராமாயணம் 1423 · அயோத்தியா 1.36

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவன் ஓ ?
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் ,
பிறத்து யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருத்திய திருத்தும் அத் திறலோன் . '

பொருள் · Meaning in Tamil

“அறத்தின் மூர்த்தி - அறத்தின் வடிவமான பரம்பொருளே! வந்து - தன் திருவுள்ளத்தால் இவ்வுலகிற்கு வந்து; அவதரித்தான் என்பது அல்லால் - இராமனாகப் பிறந்துள்ளான் என்பதையன்றி; புறத்து - அதனின் வேறாக; நாம் புகல்கின்றது ஒருபொருள் எவன் - இனி நாம் உரைக்கத்தக்கது யாது? அத் திறலோன் - அந்த ஆற்றல் மிக்க இராமன்; யாவையும் - எல்லாப் பொருள்களையும்; பிறத்து - தோற்றுவித்து; காத்து - காப்பாற்றி; பின்அவை உறத் துடைக்கும் திறத்து - இறுதியில் அவற்றை முற்றும் அழிக்கும் திறனுள்ள; மூவரும் - பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் செயல்களும்; திருந்திடத் திருத்தும் - திருத்தமடையத் திருத்துவான்.”

மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளே இராமனாகத் தோன்றியுள்ளான் என்பது கூறப்பட்டது. பிறத்து - பிறந்து என்பதன் பிறவினை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What more is there for us to say, other than this:
  2. that Dharma in bodily form has come down and been born?
  3. The three whose power is to bring all things to birth, guard them, and in the end
  4. wipe them wholly away, that mighty one corrects, so that they work aright.'

What the poem says

Vaciṭṭaṉ says openly what the story has hinted: Irāmaṉ is Dharma itself incarnate, the Supreme Being who stands beyond the three gods who create, preserve and destroy the world.

He is the one who keeps Brahmā, Viṣṇu and Civaṉ themselves on course.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puṟattu nām oru poruḷ iṉip pukalkiṉṟatu evaṉō?
aṟattiṉ mūrtti vantu avatarittāṉ eṉpatu allāl,
piṟattu yāvaiyum kāttu avai piṉ uṟat tuṭaikkum
tiṟattu mūvarum tiruntiṭat tiruttum at tiṟalōṉ.'