கம்பராமாயணம் 1424 · அயோத்தியா 1.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொன் உயிர்த்த பூ மடந்தையும் - அழகினைத் தோற்றுவிக்கும் சீதேவியும்; புவி எனும் திருவும் - மண்மடந்தையும்; இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன் - (தமக்கு) இனிய உயிர் போன்ற துணைவன் இவனே என்று கருதுகின்ற இராமன்; தன் உயிர்க்கு (நல்லன்) என்கை புல்லிது - தன் உயிர்க்கு இனியான் என்று சொல்லுவது புன்மையானது; தன் பயந்து எடுத்த - தன்னைப் பெற்றெடுத்த; உன் உயிர்க்கு என - உன் உயிர்க்கு எவ்வாறு நல்லனாக இருக்கிறானோ அவ்வாறே; மன் உயிர்க்கு எலாம் - நிலைபெற்ற எல்லா உயிர்களுக்கும்; நல்லன் - நல்லவனாய் இருக்கிறான்.”
இப்பாட்டு, இராமன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்பதனைக் கூறுகிறது. உயிர்த்துணைவன் - உவமத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The lotus lady who brings forth beauty, and the goddess who is the Earth,
- both think of Irāmaṉ as their sweet companion, dear as life;
- to say he is good to his own life is a mean thing to say; as he is to your life,
- you who begot and raised him, so is he good to every living being, mighty one!'
What the poem says
Irāmaṉ does not live for himself. Śrī and the Earth both regard him as their beloved, and just as he is a devoted son to the father who raised him, he is good to every creature in the world.
To praise him merely as good to himself would be to belittle him.