கம்பராமாயணம் 1425 · அயோத்தியா 1.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“வீர! - வீரனே; வைகலும் அனையான் பேரினால் - நாள் தோறும் அந்த இராமன் திருநாமத்தைச் சொல்லுவதால்; வரும் இடர் எலாம் - ஒருவர்க்கு உண்டாகின்ற துன்பங்கள் எல்லாம்; பெயர்கின்ற பயத்தால் - விலகிப் போகின்ற தன்மையால்; நின் குல மைந்தனை - உன் சிறந்த மகனாகிய இராமனை; வேதியர் முதலோர் யாரும் - வேதம் ஓதும் அந்தணர் முதலியோர் எல்லாரும்; யாம் செய்த நல் அறப் பயன் என - நாம் செய்த புண்ணியத்தின் விளைவு என்று; இருப்பார் - நினைத்திருக்கிறார்கள்; வாரம் என் இனிப் பகர்வது - (என்றால்) குடிமக்களுக்கு அவன்மீது உள்ள அன்பைப் பற்றி என்ன கூறுவது?
“பேரினால், வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்” என்பதால் இராமனைக்காட்டிலும் இராம நாமம் ஆற்றல் மிக்கது என்பது குறிக்கப்பட்டது. “இராம!” என எல்லாம், மாறும், அதின் மாறு பிறிது இல்” என வலித்தான் (4828) என்று பின்னும் குறிக்கப்படுதல் காணலாம். பயம் - தன்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What more is there to say of their love? Every day,
- because the troubles that come are driven off by his very name,
- hero, the Brahmins and all the rest regard this son
- of your line as the fruit of the good deeds they have done.'
What the poem says
Vaciṭṭaṉ describes the people's devotion. Simply speaking Irāmaṉ's name each day drives misfortune away, so Brahmins and everyone else think of him as the reward for their own good deeds.
The commentary notes the hint that Irāmaṉ's name is even more powerful than Irāmaṉ himself, an idea Kampaṉ returns to later in the epic.