கம்பராமாயணம் 1427 · அயோத்தியா 1.40

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1`'மனிதர் வானவர் மற்று உளோர் அற்றம் காத்து அளிப்பார் ,
இனி இம் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை ;
அனையது ஆதலின் , அரச ! நிற்கு உறு பொருள் அறியில் ,
புனித மாதவம் அல்லது ஒன்று இல் '' எனப் புகன்றான் .

பொருள் · Meaning in Tamil

“அரச! - மன்னனே!; மனிதர் வானவர், மற்றுளோர் - மக்களும், தேவரும், நரகரும் ஆகிய; இனிய மன் உயிர்க்கு - இனிமை நிறைந்த நிலைபெற்ற உயிர்களுக்கு; அற்றம் காத்து அளிப்பார் - கேடு வாராமல் பாதுகாத்து அருள்புரிபவர்; இராமனின் சிறந்தவர் இல்லை - இராமனைப் போலச் சிறந்தவர் மற்றொருவர் இல்லை; அனையது ஆதலின் - இராமனது சிறப்பு அத்தன்மையதாக இருத்தலின்; நிற்கு உறு பொருள் அறியின் - உனக்குச் செய்தற்குரிய செயலை ஆராய்ந்தால்; புனித மாதவம் அல்லது - தெய்வத்தன்மையுடைய துறவறம் அன்றி; ஒன்று இல் - மற்றொரு செயல் இல்லை; எனப் புகன்றான் - என்று சொன்னான் (வசிட்ட முனிவன்).

“இராமனின் சிறந்தவர்” என்பதில் இன் ஒப்புப் பொருளில் வந்தது. ஒப்பவர் இன்மை கூறவே மிக்கவர் இன்மை பெறப்படும். இயற்றுதற்கு அருமை பற்றித் துறவறம் “மாதவம்” எனக் குறிக்கப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Of all who guard from harm and cherish men, gods and the other beings,
  2. for the sweet living creatures there is none finer than Irāmaṉ;
  3. that being so, King, if one asks what befits you,
  4. there is nothing but pure, great penance,' he said.

What the poem says

Vaciṭṭaṉ concludes. No one can protect all beings, human, divine and others, as well as Irāmaṉ, so the kingdom will be in the best of hands.

The only fitting course left for Tacarataṉ is the holy and difficult path of renunciation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'maṉitar vāṉavar maṟṟuḷōr aṟṟam kāttu aḷippār,
iṉiya maṉṉuyirkku irāmaṉiṉ ciṟantavar illai;
aṉaiyatu ātaliṉ, araca! niṟku uṟu poruḷ aṟiyiṉ,
puṉita mā tavam allatu oṉṟu il'' eṉap pukaṉṟāṉ.