கம்பராமாயணம் 1429 · அயோத்தியா 1.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனையது ஆகிய உவகையன் - அத்தன்மைத்தாகிய மகிழ்ச்சி யடைந்த தயரதன்; கண்கள் நீர் அரும்ப - அம் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கண்களில் நீர் துளிர்க்க; முனிவன் மாமலர்ப் பாதங்கள் - வசிட்ட முனிவனுடைய சிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை; முறைமையின் இறைஞ்சி - வணங்குதற்குரிய முறைப்படி வணங்கி; “இனிய சொல்லினை - செவிக்கும் சிந்தைக்கும் இனிய கருத்தினைத் தெரிவித்தாய்; தனியன் நானிலம் தாங்கியது - தனியொருவனாக யான் மண்ணுலகினைப் போற்றிக் காத்தது; எம்பெருமான் அருள் அன்றோ - என் இறைவனாகிய நினது அருளால் அல்லவா? அவற்கு இது தகாதோ - அந்த இராமனுக்கு இவ்வாறு அரசுபுரிதல் தகுதியுடையதாகாதோ? (ஆகும்).”
ஆங்கிலம் · English translationAI
Translation
- Filled with such joy, tears welling in his eyes,
- he bowed in due form at the great lotus feet of the sage:
- 'Your words are sweet. Was it not by your grace, my lord,
- that I upheld the earth alone? And will it not be fitting for him?'
What the poem says
Overcome with happy tears, Tacarataṉ bows at Vaciṭṭaṉ's feet. He credits the sage's grace for his own long and successful reign.
With that same grace behind him, he asks, how could kingship not suit Irāmaṉ?