கம்பராமாயணம் 1430 · அயோத்தியா 1.43

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“எந்தை - என் தந்தை போன்றவனே; நீ உவந்து இதம்சொல - நீ விரும்பி நன்மையானவற்றை எடுத்துக் கூற; எம் குலத்து அரசர் - எம்முடைய சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்கள்; அந்தம் இல் அரும் பெரும் புகழ் - அழிவு இல்லாத அரியதும் மிக்கதுமாகிய புகழினை; அவனியில் நிறுவி - உலகில் நிலைபெறச் செய்து; முந்து வேள்வியும் முடித்து - சிறந்த யாகங்களையும் நிறைவேற்றி; தம் இருவினை முடித்தார் - தம் நல்வினை தீவினையாகிய இருவினைகளையும் வென்றார்; அவ் அருள் எனக்கும் வந்தது - அந்த அருட்பேறு எனக்கும் கிடைத்தது;” என்று உரைசெய்து மகிழ்ந்தான் - என்று சொல்லி இன்புற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Father, because you gladly gave good counsel, the kings of our line
  2. set up on earth a fame endless, rare and great,
  3. completed the foremost sacrifices, and brought both their kinds of deeds to an end;
  4. that same grace has come to me,' he said, and rejoiced.

What the poem says

Tacarataṉ calls Vaciṭṭaṉ "father". As family preceptor for generations, the sage guided earlier kings of the line to lasting fame, to great sacrifices, and finally to liberation, the ending of both good and bad karma.

Now, the king says, that grace has reached him too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entai nī uvantu itam cola, em kulattu aracar,
antam il arum perum pukaḻ avaṉiyil niṟuvi,
muntu vēḷviyum muṭittut tam iru viṉai muṭittār;
vantatu av aruḷ eṉakkum' eṉṟu uraiceytu makiḻntāṉ.