கம்பராமாயணம் 1432 · அயோத்தியா 1.45

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1`'உறத் தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனம் அத்து ஐ
துறத்தி நீ எனும் சொல் சுடும் ; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று ;
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதே ? ''

பொருள் · Meaning in Tamil

“அரசு இராமற்கு உறத் தகும் என்று - இராமனுக்கு அரசுரிமை பொருந்துதல் தக்கது என்று; உவக்கின்ற மனத்தை - மகிழ்கின்ற மனத்தை; நீ துறத்தி எனும் சொல் சுடும் - நீ எங்களைப் பிரிகிறாய் என்னும் சொல்லானது சுடுகிறது; நின் குலத் தொல்லோர் - உன் சூரிய குலத்தில் தோன்றிய முன்னோர்கள்; மறத்தல் செய்கிலா தருமத்தை - மறவாமல் போற்றிய அறத்தை; மறப்பதும் வழக்கு அன்று - நீ மறந்து கைவிடுதலும் முறைமை அன்று; இனி அறத்தின் ஊங்கு கொடிது - (ஆதலால்) இனி அறத்தைவிடக் கொடியது; எனல் ஆவது ஒன்று யாதோ - என்று சொல்லத்தக்கது பிறிதொன்று எது?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The heart that rejoices that the kingdom rightly falls to Irāmaṉ
  2. is scorched by the words “you will renounce”; yet to forget the dharma
  3. that the ancients of your line never forgot is not the custom either;
  4. what, then, could be called crueller than dharma?'

What the poem says

Cumantiraṉ voices the ministers' mixed feelings. Their joy at Irāmaṉ's accession is burned by the news that Tacarataṉ will leave them. Yet his ancestors always kept the dharma of retiring in old age, and he cannot abandon it.

So dharma, which demands this parting, is the cruellest thing of all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'uṟat takum aracu irāmaṟku eṉṟu uvakkiṉṟa maṉattait
tuṟatti nī eṉum col cuṭum; niṉ kulat tollōr
maṟattal ceykilāt tarumattai maṟappatum vaḻakku aṉṟu;
aṟattiṉ ūṅku iṉik koṭitu eṉal āvatu oṉṟu yātō?''