கம்பராமாயணம் 1435 · அயோத்தியா 1.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலங்கல் மன்னனை அடிதொழுது - மாலை அணிந்த தயரதனைத் திருவடிகளில் வணங்கி; அவன் மனம் அனையான் - அத்தயரதனது மனத்தை ஒத்தவனான சுமந்திரன்; விலங்கல் மாளிகை வீதியில் - மலைபோலும் மாளிகைகளையுடைய அரச வீதியில்; விரைவொடு சென்றான் - விரைவாகச் சென்று; தலங்கள் யாவையும் - உலகங்கள் எல்லாவற்றையும்; தான் பெற்றனன் எனத் தளிர்ப்பான் - தானே அடைந்தவன்போல மனமகிழ்ச்சி யுடையவனாய்; பொலன்கொள் தேரொடும் - பொன்மயமான தேருடன்; இராகவன் திருமனை புக்கான் - இராமபிரானது திருமாளிகையில் புகுந்தான்.
“அவன் மனம் அனையான்” என்பது இராமன் திறத்தில் எல்லாரும் தயரதனைப்போலும் அன்பு நிறைந்த மனத்தராய் இருந்தமை காட்டும். “அவ் ஊர்ச் சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்” (1560) எனப் பின்னும் வருதல் கருதத்தக்கது. அமைச்சன் சுமந்திரன் அரசன் குறிப்பறிந்து நடப்பவன் என்பார் அவன் மனம் அனையான் என்றார். இராகவன் - இரகுமரபில் தோன்றியவன்; தத்திதாந்த நாமம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bowing at the feet of the garlanded king, he who was of one mind with him
- went swiftly down the street of mountain-like mansions,
- flourishing with joy as if he had won every world for himself,
- and in his golden chariot entered the house of Irākavaṉ.
What the poem says
Cumantiraṉ, who always reads the king's mind and shares his love for Irāmaṉ, hurries to Irāmaṉ's palace in his golden chariot, as happy as if he had won all the worlds.
Irāmaṉ is called Irākavaṉ, "descendant of Raghu". The commentary notes that the whole city shares Tacarataṉ's love for Irāmaṉ.