கம்பராமாயணம் 1436 · அயோத்தியா 1.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அண்ணல் - தலைவனான இராமபிரான்; பிரியா வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் - தன்னை விட்டு என்றும் நீங்காத அழகியதும் கொடியதுமான வில்லை ஏந்திய இளைஞனான இலக்குவனும்; மருங்கு இனிது இருப்ப - பக்கத்தில் இனிதாக இருக்க; பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் - பெண்டிர்களுக்குள் இனிய அமுதம் போன்றவளான சீதையோடும்; ஆண்டு இருந்தான் - அங்கு வீற்றிருந்தான்; அழகு அரு நறவு என - அச்சேர்த்தியின் அழகானது அரிய தேனாக; தன் கண்ணும் உள்ளமும் வண்டு என - தன் கண்களும் உள்ளமும் வண்டாக; களிப்புறக் கண்டான் - மகிழ்ச்சி எய்தச் சுமந்திரன் கண்டான்.
இராமபிரான் சீதையோடும் தம்பி இலக்குவனோடும் இருந்த காட்சி யழகைப் பரிவில் மிக்க சுமந்திரன் கண்டு உவகை கொண்ட திறம் இங்கு உரைக்கப்பட்டது. பிரியா என்னும் அடைமொழியைப் பெண்ணின் இன் அமுதொடும் கூட்டி உரைத்தல் தகும். ஏனெனில் “அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!” என்பது நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழி 6:10:10).
ஆங்கிலம் · English translationAI
Translation
- With her who is the sweet nectar among women, and with the prince
- of the lovely, cruel bow, who never leaves him, seated happily at his side,
- the noble one sat there; and that beauty, like rare honey,
- Cumantiraṉ beheld, his eyes and heart rejoicing like bees.
What the poem says
Cumantiraṉ finds Irāmaṉ at home with Cītai, "the sweet nectar among women", and Ilakkuvaṉ, who never leaves his brother's side, bow in hand. The minister drinks in the sight like a bee drinking honey.
The commentary suggests that "never parting" suits Cītai as well, recalling Nammāḻvār's verse in which Śrī says she cannot leave Viṣṇu's chest even for a moment.