கம்பராமாயணம் 1437 · அயோத்தியா 1.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்டு கைதொழுது - சுமந்திரன் இராமனைப் பார்த்துக் கை கூப்பி வணங்கி; ஐய - ஐயனே!; இக் கடல்இடைக் கிழவோன் - இந்தக் கடலால் சூழப்பட்ட உலகுக்கு உரியவனான தயரத மன்னன்; ஒர் காரியம் உண்டு - ஒரு காரியம் உள்ளது; வருக என - (ஆதலால்) இராமனை அழைத்து வருக என்று; உரைத்தனன்” எனலும் - சொன்னான் என்ற அளவில்; புண்டரீகக் கண் புரவலன் - செந்தாமரைக் கண்ணனாகிய இராமன்; பொருக்கென எழுந்து - விரைவாகப் புறப்பட்டு; ஓர் கொண்டல்போல் - ஒரு கரிய மேகம் போல; அவன்கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான் - அந்தச் சுமந்திரனது கொடி பறக்கும் நெடிய தேரில் ஏறிக்கொண்டான்.
கடலிடை - கடலால் சூழப்பட்ட இடம்; உலகு. கிழவோன் - உரிமையுடையவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing him, he joined his palms: 'My lord, the master of this sea-girt earth
- says, “There is a matter to attend to; let him come.”' At these words
- the lotus-eyed prince rose at once and, like
- a rain cloud, mounted that man's tall chariot with its banner.
What the poem says
Cumantiraṉ delivers the summons simply: the king has a matter for Irāmaṉ. Irāmaṉ, lotus-eyed, rises at once and climbs into the chariot, dark and majestic as a rain cloud.