கம்பராமாயணம் 1439 · அயோத்தியா 1.52

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பணை நிரந்தன , பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன்
கணை நிரந்தன ; நாண் ஒலி கறங்கின ; நிறைப் பேர்
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் ; அனையார்
பிணை நிரந்து எனப் பரந்தனர் , நாணமும் பிரிந்தார் .

பொருள் · Meaning in Tamil

பணை நிரந்தன - (இராமன் தெருவில் புக) வாத்தியங்களின் ஒலிகள் நிரம்பின; பாட்டு ஒலி நிரந்தன - பாடல்களின் ஓசைகள் நிறைந்தன; அனங்கன் கணை நிரந்தன - மன்மதனின் மலரம்புகள் நிரம்பின; நாண் ஒலி கறங்க - வில் நாணின் ஒலிகள் ஒலித்தன; அறிவு எனும் பெரும் புனல் - இராமனைப் பற்றிய எண்ணம் என்னும் மிக்க வெள்ளம்; நிறை பேர் அணை நிரந்தன - மனஅடக்கம் என்னும் பெரிய அணையைக் கடந்தன; அனையார் - அவ்வாறான மகளிர்கள்; நாணமும் பிரிந்தார் - நாணத்தையும் விட்டவர்களாய்; பிணை நிரந்து என - பெண்மான்கள் நிரம்பினபோல; பரந்தனர் - தெருவில் வந்து நிறைந்தார்கள்.

பணை - வாத்தியங்கள்; முரசு என்பாரும் உளர்; பணை - கருவியாற் பிறப்பதற்கும், பாட்டு - கண்டத்தாற் பிறப்பதற்கும் கொள்க. நிரத்தல் - பரத்தல். அனங்கன் - உருவமில்லாதவன். அறிவைப் புனல் என்றதற்கு ஏற்ப நிறையை அணை என்றார்; உருவகம். நாணமும் என்றதில் உம்மை இறந்தது தழுவியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The drums spread their sound, the sound of songs spread; the bodiless god's
  2. arrows spread, his bowstring twanging; over the great dam of restraint
  3. spread the vast flood of thought; and those women, like does
  4. spreading out, thronged the street, leaving even modesty behind.

What the poem says

As Irāmaṉ passes, music fills the streets and Kāmaṉ, the bodiless god of love, looses his flower arrows. The women's thoughts of Irāmaṉ rise like a flood and break over the dam of self-restraint.

They pour into the street like a herd of does, abandoning even their modesty. The verb "spread" is repeated through the verse for effect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇai nirantaṉa, pāṭṭu oli nirantaṉa; aṉaṅkaṉ
kaṇai nirantaṉa; nāṇ oli kaṟaṅka; niṟaippēr
aṇai nirantaṉa aṟivu eṉum perum puṉal; aṉaiyār
piṇai niranteṉap parantaṉar, nāṇamum pirintār.