கம்பராமாயணம் 1440 · அயோத்தியா 1.53

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீள் எழுத் தொடர் வாயினும் குழையொடும் நெகிழ்ந்த ;
ஆளகம் அத்து இன் ஓடு அரமியத் தலத்தினும் அலர்ந்த ;
வாள் அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரம் அத்து இன் உம் பூத்தன ; தாமரை மலர்கள் .

பொருள் · Meaning in Tamil

நீள் எழுத் தொடர் வாயிலில் - நீண்ட தூண்கள் அமைந்த மாளிகை வாயில்களிலும்; அரமியத் தலத்தினும் - அவற்றின் நிலா முற்றங்களிலும்; குழையொடு - குண்டலங்களொடும்; நெகிழ்ந்த ஆளகத்தினோடு - அவிழ்ந்த கூந்தலொடும்; தாமரை மலர்கள் - பெண்களின் முகங்களாகிய தாமரை மலர்கள்; அலர்ந்தன - மலர்ந்தன; சாளரத்தினும் - அவை அம் மாளிகைகளின் பலகணிகளிலும்; வாள் அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்க - வாளொடும் குருதி தோய்ந்த வேலொடும் வண்டுகளொடும் கெண்டைகள் கலந்து நிற்க; பூத்தன - மலர்ந்தன.

வீதியில் வந்த பெண்களே யன்றி, வேறு சிலர் மாளிகை வாயில்களிலும் நிலா முற்றங்களிலும் இருந்து இராமனைக் கண்டனர் என்பது கருத்து. புருவம் வாளாகவும், செவ்வரிபடர்ந்த கண் குருதி படிந்த வேலாகவும், கருவிழி வண்டாகவும், புடைபெயரும் கண்கள் கெண்டையாகவும் கூறப்பட்டன. ஆளகம் - அளகம் என்பதன் நீட்டல் விகாரம்; அளகம் - கூந்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At the gateways with their long rows of pillars, with earrings and with loosened
  2. tresses, and on the terraces too, they opened;
  3. and in the windows, with swords, blood-red spears, bees and carp all mingled,
  4. they flowered as well: lotus flowers.

What the poem says

Women who have not come down into the street watch from doorways, rooftop terraces and windows, and their faces are lotuses blooming everywhere.

Their features are given as a cluster of images: brows like swords, red-veined eyes like blood-stained spears, dark pupils like bees, darting eyes like carp. Only in the last words does the poet name what all of these are: lotus flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīḷ eḻut toṭar vāyilil kuḻaiyoṭu nekiḻnta;
āḷakattiṉōṭu aramiyat talattiṉum alarnta;
vāḷ aratta vēl vaṇṭoṭu keṇṭaikaḷ mayaṅka
cāḷarattiṉum pūttaṉa; tāmarai malarkaḷ.