கம்பராமாயணம் 1441 · அயோத்தியா 1.54

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண் தலம்தரு மதி கெழு மழை முகில் அனைய
அண்டர் நாயகன் , வரை புரை அகலத்துள் அலங்கல் ,
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த .

பொருள் · Meaning in Tamil

மண்டலம் தரு மதி கெழு - வட்ட வடிவமாகிய சந்திரன் போலும் முகம் அமைந்த; மழை முகில் அனைய - கரிய மேகத்தைப் போன்ற; அண்டர் நாயகன் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானது; வரைபுரை அகலத்துள் அலங்கல் - மலையை நிகர்த்த மார்பில் உள்ள மாலையில்; தொண்டைவாய்ச்சியர் - கொவ்வைக் கனி போன்ற சிவந்த இதழ்களைக் கொண்ட மகளிரின்; நிறையொடும் நாணொடும் தொடர்ந்த - மனவடக்கமும் நாணமும் ஆகிய பண்புகள் முன்னேபோகப் பின்னே தொடர்ந்த; கெண்டையும் உள - விழிகளாகிய கெண்டைகளும் உள்ளன; கிளை பயில் வண்டொடும் கிடந்த - அவை அந்த மாலையில் முன்னரே தேனைநாடிவந்து உள்ளனவாகிய கிளை என்னும் இசையைப் பழகிய வண்டுகளோடு தங்கின.

மண்டலம் தருமதி என்பது முழுமதியைக் குறித்தது. ஈண்டு மதி ஆகுபெயராய், அதுபோலும் இராமபிரானது முகத்தைச் சுட்டியது. இராமபிரான் திருமுகத்துக்குச் சந்திரனும், திருமேனிக்கு மழைமுகிலும் ஒப்பு. கிளை - கைக்கிளை என்னும் பண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a rain cloud bearing the full round moon
  2. was the lord of the gods; in the garland on his mountain-broad chest,
  3. following after the restraint and modesty of the women with lips red as the toṇṭai fruit,
  4. there were carp as well, lying there with the bees that hum the kiḷai mode.

What the poem says

Irāmaṉ, dark as a rain cloud with a face like the full moon, rides past. The women have already lost their restraint and modesty to him, and now their eyes, pictured as carp, follow after and settle in the garland on his chest, among the bees that hum there.

Kiḷai is the name of a musical mode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṭalam taru mati keḻu maḻai mukil aṉaiya
aṇṭar nāyakaṉ, varai purai akalattuḷ alaṅkal,
toṇṭai vāycciyar niṟaiyoṭum nāṇoṭum toṭarnta
keṇṭaiyum uḷa kiḷai payil vaṇṭoṭum kiṭanta.