கம்பராமாயணம் 1442 · அயோத்தியா 1.55

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மழையொடு கலை உறத் தாழ்வ - மேகம் போன்று வீழ்வனவாகிய கூந்தலொடு உடைகளும் நிலத்தை அடைய; சரிந்த பூ உள - சிந்திய பூக்கள் உள்ளன; பனிக் கடை முத்து இனம் படைப்ப - குளிர்ச்சி பொருந்திய கடைக்கண்கள் முத்துக் கூட்டங்களைத் தோற்றுவிக்க; பரிந்த பூ உள - அவர்கள் எடுத்தெறிந்த மலர்களும் உள்ளன; இளமுலை இழை இடை நுழைய - இளமையான மகளிர் தனங்களில் கிடந்த அணிகலன்களின் ஊடே நுழைதலால்; எரிந்த பூ உள - கருகிய பூக்களும் உள்ளன; மீனுடை வானின்று வீழ்வ - விண்மீன்கள் நிறைந்த வானத்திலிருந்து தேவர்கள் வீசுதலால் வீழ்வனவாகிய; விரிந்த பூ உள - நன்றாக மலர்ந்த மலர்களும் உள்ளன.

இராமன் தேர் சென்ற வீதியில் மகளிர் விரகத்தால் சரிந்தனவும், பரிந்தனவும், எரிந்தனவும் ஆகிய மலர்களும், விண்ணவர் மகிழ்ச்சியால் சொரிந்த மலர்களும் கிடந்தன. தாழ்வ, வீழ்வ - வினையாலணையும் பெயர்கள். இளமுலை இழை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. மகளிர் சூடிய பூக்கள் வீழ்வது தீக்குறி (அபசகுனம்) ஆகும். இராமனுக்குத் துன்பம் நேரவிருப்பதைச் சுட்டுவதாக அமைவன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There were flowers that slid down as cloud-dark hair and garments fell to the ground;
  2. there were flowers flung away as the cool corners of eyes brought forth strings of pearls;
  3. there were flowers scorched as they slipped among the ornaments on young breasts;
  4. there were full-blown flowers falling from the star-filled sky.

What the poem says

The street is strewn with four kinds of flowers: those slipping from the women's loosened hair, those flung by women weeping pearl-like tears, those wilted by bodies burning with desire, and those showered by the delighted gods.

The commentary notes that flowers falling from women's hair are an ill omen, foreshadowing the sorrow about to overtake Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1carinta pū uḷa, maḻaiyoṭu kalai uṟat tāḻva;
parinta pū uḷa, paṉik kaṭai muttu iṉam paṭaippa;
erinta pū uḷa, iḷa mulai iḻai iṭai nuḻaiya,
virinta pū uḷa, mīṉuṭai vāṉiṉṟum vīḻva.