கம்பராமாயணம் 1444 · அயோத்தியா 1.57

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயது அவ் வழி நிகழ்தர - அத்தகைய செயல் அவ்விடத்து நடைபெற; ஆடவர் எல்லாம் - இராமனைக் கண்ட ஆண்கள் எல்லாரும்; தாயை முன்னிய கன்றுஎன நின்று - தாய்ப்பசுவை நினைந்த கன்று போல நின்று; உயிர் தளிர்ப்ப - உயிர் மகிழ்ச்சியடைய; தூய தம்பியும் தானும் - தூய்மை நிறைந்த தம்பியான இலக்குவனும் தானும்; அச் சுமந்திரன் தேர்மேல் போய் - அந்தச் சுமந்திரனது தேரில் ஏறிச் சென்று; அகம் குளிர் புரவலன் இருந்துழி - மனம் மகிழ்ந்திருக்கின்ற தயரதன் இருந்த மண்டபத்துள்; புக்கான் - புகுந்தான்.

உள்ளத்தின் தளிர்ப்பு உயிரின் தளிர்ப்பாகக் கூறப்பட்டது. தம்பியும் தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை வினைக்கொண்டு முடிந்தது, “வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்” என்பது போல (தைலமாட்டுப் படலம், 60). இருந்த உழி - இருந்துழி. புக்கான் - புகு என்னும் பகுதி இரட்டித்துக் காலம் காட்டிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While this went on along that road, all the men
  2. stood like calves that long for their mother, their spirits flourishing;
  3. with his pure brother he rode on Cumantiraṉ's chariot
  4. and entered where the king sat, his heart at peace.

What the poem says

While the women swoon, the men of the city gaze at Irāmaṉ with the trusting love of calves for their mother. Irāmaṉ and Ilakkuvaṉ arrive at the hall where Tacarataṉ waits, content.

The commentary notes the singular verb "he entered" for both brothers, a usage Kampaṉ repeats elsewhere to keep the focus on Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu avvaḻi nikaḻtara, āṭavar ellām
tāyai muṉṉiya kaṉṟu eṉa niṉṟu uyir taḷirppa
tūya tampiyum, tāṉum, ac cumantiraṉ tērmēl
pōy, akam kuḷir puravalaṉ iruntuḻip pukkāṉ.