கம்பராமாயணம் 1446 · அயோத்தியா 1.59

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நலம்கொள் மைந்தனை - நன்மைகள் அனைத்தையும் கொண்ட தன்மகனாகிய இராமனை; தழுவினன் என்பது என் - தந்தையாகிய தயரதன் அணைத்துக்கொண்டான் என்று சொல்வது எதன்பொருட்டு?; நளிநீர் நிலங்கள் - பெரிய நீரையுடைய கடலால் சூழப்பட்ட மண்ணுலகை; தாங்குறு நிலையினை - போற்றிக் காத்தற்குரிய இராமனுடைய நிலையை; நிலையிட நினைந்தான் - அளந்து பார்க்கக் கருதி; விலங்கல் அன்ன திண்தோளையும் - இராமனுடைய மலைபோன்ற திண்மை வாய்ந்த தோள்களையும்; மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பையும் - உண்மையான திருமகள் உறையும் மாலையணிந்த மார்பையும்; தனது தோள் மார்பு கொண்டு - தன்னுடைய தோள்களையும் மார்பையும் கொண்டு; அளந்தான் - அளவிட்டான்.

தயரதன் இராமனைத் தழுவியதற்குக் காப்பிய ஆசிரியர் ஒரு காரணம் கற்பித்துக் கூறலின் இது தற்குறிப்பேற்ற அணி. நினைந்தான் - முற்றெச்சம். மன்னன் மார்பில் திருமகள் உறைவதாகச் சொல்வது மரபு. இராமன் திருமாலே ஆதலின் அவன் மார்பில் உறைபவளை “மெய்த்திரு” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Why say merely that he embraced his excellent son? Meaning
  2. to gauge his fitness to bear the earth with its wide waters,
  3. he measured those shoulders, strong as mountains, and that garlanded chest
  4. where the true Śrī dwells, with his own shoulders and chest.

What the poem says

The poet gives a playful reason for the embrace: Tacarataṉ was not just hugging his son but measuring him, shoulder to shoulder and chest to chest, to see whether he was big enough to bear the burden of the earth. Inventing a fanciful cause for a natural act is the figure called taṟkuṟippēṟṟam.

Kings were said to carry Fortune on their chests; Irāmaṉ, being Viṣṇu, carries the true Śrī there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nalam koḷ maintaṉait taḻuviṉaṉ eṉpatu eṉ? naḷi nīr
nilaṅkaḷ tāṅkuṟu nilaiyiṉai nilaiyiṭa niṉaintāṉ,
vilaṅkal aṉṉa tiṇ tōḷaiyum, meyt tiru irukkum
alaṅkal mārpaiyum, taṉatu tōḷ mārpu koṇṭu aḷantāṉ.