கம்பராமாயணம் 1448 · அயோத்தியா 1.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஐய - ஐயனே!; சாலவும் அலசினென் - மிகவும் தளர்ந்தேன்; அரும் பெரு மூப்பும் மெய்யது ஆயது - தாங்குதற்கு அரியதும் பெரியதுமான வயோதிகமும் என் உடம்பில் தோன்றிவிட்டது; வியல் இடப் பெரும்பரம் விசித்த - அகன்ற இடத்தைக் காக்கும் பெரிய பாரமானது கட்டப்பட்ட; தொய்யல் மா நிலச்சுமை - துன்பத்திற்குக் காரணமாகிய பெரிய அரசாட்சியை நடத்தும் பொறுப்பாகிய; உறு சிறை துறந்து - மிக்க சிறையை விட்டுவிட்டு; இனி யான் உய்யல் ஆவது - இனி நான் பிழைக்கலாவதாகிய; ஓர் நெறி புக - ஒப்பற்ற வழியில் செல்ல; உதவிட வேண்டும் - உதவி செய்ய வேண்டும்.”
தொய்யல் - துன்பம்; சோர்வும் ஆம். சுமை - பொறுப்பு; “என் தலையில் இவனைக் காக்கும் சுமை பட்” என்னும் பேச்சுவழக்கில் இதற்கு இப்பொருள் இருத்தலைக் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My son, I am worn out; old age, hard and heavy to bear,
- has come upon my body; the great load of this wide land bound upon me,
- the wearying burden of the earth, a prison: I would leave it, and now
- you must help me enter the one path by which I may be saved.'
What the poem says
Tacarataṉ makes his request plainly. He is exhausted and old. Kingship is a heavy load tied to his back, even a prison.
He asks his son to free him from it so that he can take the path to salvation.