கம்பராமாயணம் 1453 · அயோத்தியா 1.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேல்நாள் - முற்காலத்தில்; ஒருமகன் - ஒப்பற்றவனாகிய பகீரதன்; ஆளும் நல்நெறிக்கு - தாம் நுகரக்கூடிய (வீட்டுக்குரிய) நல்ல வழிக்கு; அமைவரும் அமைதி இன்றாக - பொருந்தும் தன்மை தன் முன்னோர்களுக்கு இல்லாமற்போனதால்; நாளும் - (அவர்கள் உய்வின் பொருட்டு) எந்நாளும்; நம்குலம் நாயகன் - நமக்குக் குல தெய்வமாகிய திருமாலின்; நறை விரி கமலத் தாளின் - தேன் நிறைந்த தாமரை போலும் திருவடிகளினின்றும்; நல்கிய கங்கையைத் தந்து - வெளிப்படுத்திய கங்கையாற்றை இவ்வுலகில் கொண்டுவந்து; தந்தையரை மீள்வு இலா உலகு - தன் முன்னோர்களை (சகர புத்திரர்களை) மீண்டு வாராத வீட்டுலகத்தில்; ஏற்றினான் - ஏறச்செய்தான்.
மக்கட் பேற்றின் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டாகப் பகீரதன் வரலாற்றினை எடுத்துக் காட்டுகிறான். நம்குலம் - இக்குவாகு குலம். மீள்வு இலா உலகு - திருநாடு; வீடு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When his forebears had no fitting means to reach the good path they sought,
- then, for their sake, from the honey-spreading lotus
- feet of the lord of our clan he brought down the Kaṅkai they let flow, and his fathers
- he raised to the world from which none returns: one son, in days of old.
What the poem says
To show what a son can do for a father, Tacarataṉ recalls Pakīrataṉ, an ancestor of their own solar line. The sons of Cakaraṉ had been burned to ash and could not reach liberation; Pakīrataṉ brought the river Kaṅkai down to earth, the river that flows from the lotus feet of Tirumāl, the family's deity, and its waters lifted them to the world of no return.
The example prepares the king's argument: a good son is the one who frees his fathers.