கம்பராமாயணம் 1455 · அயோத்தியா 1.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனையது ஆதலின் - அவ்வாறு இருத்தலின்; அரசன் அருந்துயர்ப் பெரும் பரம் - மன்னன் அரிய துன்பத்தைத் தரும் பெரிய அரச பாரத்தை; வினையின் என்வயின் வைத்தனன் - வஞ்சகமாக என்மீது சுமத்தினான்; எனக் கொள வேண்டா - என்று நினைத்துக்கொள்ள வேண்டா; புனையும் மாமுடி புனைந்து - அரசர் சூடும் பெருமை மிக்க கிரீடத்தை அணிந்து கொண்டு; இந்த நல் அறம் புரக்க - இந்த அரசாட்சியாகிய நல்ல அறத்தை வளர்க்க; நினையல் வேண்டும் - உளங்கொள வேண்டும்; யான் நின்வயின் பெறுவது ஈது என்றான் - நான் உன்னிடம் வேண்டுவது இதுவே என்றான்.
பகை களைந்து தக்கவாறு அறம் வழுவாமல் ஆட்சி செய்தலின் கடுமை பற்றி, ‘பெரும்பரம்’ என்றான். “நின்னை வேண்டி எய்திட விழைவது ஒன்று உண்டு” (60) என்பது முதல் இச்செய்யுள்வரை தயரதன் பலர் முன்னிலையில் இராமனை அரசாட்சியை ஏற்க வேண்டிய செய்தி தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since it is so, that the king has slyly laid on me
- this heavy load of bitter sorrow, do not take it so;
- put on the great crown that kings wear and, to guard this good dharma,
- set your mind; this is what I would have from you," he said.
What the poem says
Tacarataṉ ends his appeal. He admits he has called kingship a "heavy load", since ruling justly and putting down enemies is hard work, but he asks Irāmaṉ not to think his father is cunningly shifting a burden onto him.
Rather, Irāmaṉ should wear the crown in order to protect dharma. This closes the public request, which began a few verses earlier when the king said there was one thing he wished to ask of his son.