கம்பராமாயணம் 1456 · அயோத்தியா 1.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாதை அப் பரிசு உரை செய - தந்தை அவ்வாறு சொல்ல; தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் - தாமரை போன்ற கண்களை யுடைய இராமன் அரசாட்சி கிடைத்தது என்று விரும்பினான் அல்லன்; இகழ்ந்திலன் - அரசாட்சி துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்; இது கடன் என்று உணர்ந்தும் - அரச பதவியை ஏற்கும் இச்செயல் தனக்குரிய கடமை என்று உணர்ந்தும்; கொற்றவன் யாது ஏவியது - அரசன் எதனைச் செய்யுமாறு ஆணையிட்டானோ; அது செயல் அன்றோ - அதனைச் செய்வதல்லவா; எற்கு நீதி என நினைந்தும் - எனக்கு நியாயம் என்று எண்ணியும்; அப் பணி தலைநின்றான் - அரச பதவி ஏற்றலாகிய அச்செயலை மேற்கொண்டு நின்றான்.
இதனால் இராமன் ஆட்சியின்மீது விருப்போ வெறுப்போ இன்றி இருந்த தன்மையும் அவன் தந்தையின் சொற்களை மந்திரமாகக் கருதுபவன் என்னும் உண்மையும் சுட்டப்பட்டுள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When his father had spoken so, the lotus-eyed one
- felt no craving, nor any scorn; knowing that this was his duty,
- and thinking, "Is it not right for me to do whatever the king commands?",
- he took that task upon himself.
What the poem says
Irāmaṉ's response is described in a single, carefully balanced verse. He is neither eager for the throne nor dismissive of it as a burden.
He accepts it for two reasons only: it is his duty, and it is his father's command. The poet is establishing the inner calm with which Irāmaṉ will later accept the opposite command, exile, just as evenly.