கம்பராமாயணம் 1457 · அயோத்தியா 1.70

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குருசில் சிந்தையை - இராமனது மனக் கருத்தை; மனம் கொண்ட கொற்ற வெண்குடையான் - உட்கொண்ட வெற்றி பொருந்திய வெண்குடையை யுடையவனாகிய தயரதன்; இவ் வரம் தருதி - இந்த வரத்தைத் தருவாய்; எனச் சொலி - என்று சொல்லி; உயிர் உறத் தழுவி - அவனைத் தன் உயிரோடு பொருந்தும்படி இறுக அணைத்துக் கொண்டு; சுருதி அன்ன - வேதத்தையொத்த; தன் மந்திரச் சுற்றமும் சுற்ற - தன்னுடைய அமைச்சர்களின் கூட்டமும் தன்னைச் சூழ்ந்துவர; பொரு இல் மேருவும் - ஒப்பு அற்ற மேரு மலையும்; பொரு அருங் கோயில் - ஒப்பாவதற்கு அரிய தன் அரண்மனையில்; போய்ப் புக்கான் - போய்ச் சேர்ந்தான்.

நன்மை தீமைகளை ஆராய்ந்து அரசனுக்குச் சொல்லி நீதி வழி நிறுத்துதல் பற்றி அமைச்சர்களுக்குச் சுருதியை உவமையாகக் கூறினார். மேருவும் - உம்மை உயர்வு சிறப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He of the victorious white parasol, taking the prince's mind to heart,
  2. said, "Grant me this boon," and held him close, as close as his own life;
  3. then, with his circle of counsellors, who were like the Veda, around him,
  4. he went into his palace, which even peerless Mēru could not rival.

What the poem says

Seeing that Irāmaṉ has accepted, Tacarataṉ treats it as a boon granted to him and embraces his son. He then returns to his palace with his ministers.

The ministers are compared to the Veda because, like scripture, they weigh good and evil and keep the king on the path of justice. The palace is so lofty that even Mēru, the mountain at the centre of the world, cannot compare with it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kurucil cintaiyai maṉakkoṇṭa koṟṟa veṇkuṭaiyāṉ,
'taruti iv varam' eṉac coli, uyir uṟat taḻuvi
curuti aṉṉa taṉ mantirac cuṟṟamum cuṟṟa
poru il mēruvum poru aruṅ kōyil pōyp pukkāṉ.