கம்பராமாயணம் 1459 · அயோத்தியா 1.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றி வேந்தரை வருக என்று - தயரதன், வெற்றி பொருந்திய அரசர்களை அயோத்திக்கு வருக என்று; பொன் திணிந்த தோட்டு - பொன்னாலாகிய ஓலையிலே; உவணம் வீற்றிருந்த - கருடனது வடிவம் பெருமையோடு திகழ்ந்த; அரும் பெறல் இலச்சினை போக்கி - பெறுதற்கு அரிய தன் அடையாள முத்திரையைவிட்டு அனுப்பி; நல்லோய் - (பின்பு வசிட்டமுனிவனை நோக்கி) பெரியீர்; சென்று - நீர் சென்று; சித்திர நளிர் முடி - சித்திர வேலைப்பாடமைந்த பெருமை தங்கிய முடியை; நன்று கவித்தற்கு - இராமனுக்கு நன்றாகச் சூட்டுதற்கு; வேண்டுவ வரன்முறை அமைக்க - வேண்டுவனவற்றை முறைப்படி அமைத்திடுக; எனச் செப்ப - என்று சொல்ல.
இப்பாட்டு, குளகம். இராமனுக்கு முடிசூட்டுதற்கு அமைச்சர்களின் இசைவைப் பெற்ற தயரதன், மேற்கொண்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்யத் தொடங்கி அரசர்களுக்கு அழைப்பு விடுத்து, முறைப்படி ஆவன செய்ய வசிட்டனை வேண்டினான். அரசர், விடுக்கும் ஓலையில் தன் முத்திரையை இட்டு அனுப்புதல் மரபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bidding the victorious kings "Come!", he sent his precious seal, on which the eagle sat enthroned,
- on leaves of beaten gold, and he said:
- "Good sir, so that the bright, cool crown of fine work may be set well upon him,
- go and arrange all that is needed in due order."
What the poem says
Having won his counsellors' consent, Tacarataṉ begins the preparations for Irāmaṉ's coronation. He sends invitations on gold leaf to the allied kings, stamped with his royal seal, which bears the figure of the divine eagle Karuṭaṉ; sealing such letters was the custom of kings.
He then asks Vacittaṉ, the family preceptor, to arrange the rites properly. The verse leaves its sentence open, and it is completed in the next one.