கம்பராமாயணம் 1460 · அயோத்தியா 1.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரிய மாதவன் - முடிசூட்டுதற்கு உரிய பெரிய தவத்தைச் செய்தவனான வசிட்ட முனிவன்; ஒள்ளிது என்று உவந்தனன் - நல்லது என்று சொல்லி மகிழ்ந்தவனாய்; விரைந்து - விரைவாக; ஓர் பொரு இல் தேர்மிசை - ஒப்பற்ற ஒரு தேரில் ஏறி; அந்தணர் குழாத்தொடும் போக - வேதியர் கூட்டத்தோடும் செல்ல; நிருபர் கேண்மின்கள் - (தயரதன் தன் அருகே இருந்த அரசர்களைப் பார்த்து) அரசர்களே! கேளுங்கள்; நெறி முறைமையினால் - அரச நீதி முறைப்படி; இராமற்குத் திருவும் பூமியும் - இராமனுக்கு அரசச்செல்வமும் நாடும்; சீதையின் சிறந்தன - சீதைபோலச் சிறந்தனவாய் உள்ளன; என்றான் - என்று சொன்னான்.
இங்குக் குறிக்கப்படும் அரசர்கள் ஓலை பெற்று வந்தவர் அல்லர்; தயரதன் அருகில் திறை செலுத்தவும், காணவும் வந்தவர்கள் ஆவர். நிருபர் அண்மைவிளி. சீதையின் - “இன்” ஒப்புப்பொருளில் வந்தது; உறழ்ச்சிப் பொருளில் வந்ததாகவும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great ascetic whose office it was rejoiced, saying "Excellent," and swiftly,
- on a peerless chariot, set off with a throng of brahmins;
- "Kings, hear me: to Irāmaṉ, by the rightful order of things,
- fortune and the earth have come, as precious as Cītai," he said.
What the poem says
Vacittaṉ gladly agrees and leaves at once by chariot with a company of brahmins to prepare the coronation. Tacarataṉ then turns to the kings who are already at his court, men who had come to pay tribute or to see him rather than in answer to the invitations.
He tells them that royal fortune and the land now belong to Irāmaṉ by right, and are as excellent as his wife Cītai. The phrase can also be read as "even more excellent than Cītai".