கம்பராமாயணம் 1461 · அயோத்தியா 1.74

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இறைவன் சொல் எனும் இன் நறவு - அரசனாகிய தயரதன் சொன்ன சொல்லாகிய இனிய கள்ளை; அருந்தினர் யாரும் - பருகிய அரசர்கள் முதலிய அனைவரும்; முறையில் நின்றிலர் - முறையில் நில்லாதவர்களாய்; முந்துறு களியிடை மூழ்கி - எழுகின்ற களிப்பு என்னும் வெள்ளத்தில் மூழ்கி; நெஞ்சிடை நிறையும் உவகை போய் - தங்கள் மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியானது கரைகடந்து போய்; மயிர் வழி நிமிர - மயிர்க்கால்களின் வழியே வெளிப்பட; உறையும் விண்ணகம் - உடல் நீங்கியபின் நல்வினை புரிந்த உயிர்கள் சென்று தங்கும் துறக்கத்தை; உடலொடும் எய்தினர் ஒத்தார் - இவ்வுடம்புடனே அடைந்தவர் போலாயினர்.

சொல் நறவு - உருவகம், அரசன் சொல்லைக் கேட்டவர் தம் நிலைமறந்து உவகை வெளிப்படப் பெருமகிழ்ச்சியுற்றனர் என்பதாம். ‘உடலொடும் துறக்கம் எய்தினர் ஒத்தார்’ என்னும் உவமை முன்னும் “உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார்” (1160) என வருதல் காணலாம். உறையும் விண்ணகம் - நல்வினை புரிந்த உயிர் சென்று உறையும் துறக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All who drank the sweet wine that was the king's word
  2. could no longer keep to decorum, plunged in a rising flood of joy;
  3. as the gladness that filled their hearts burst out through the roots of their hair,
  4. they were like men who had reached heaven, where good souls dwell, in their very bodies.

What the poem says

The king's words are pictured as a sweet liquor: everyone who hears them becomes drunk with joy and forgets ceremony. Their delight overflows so that their hair stands on end.

The kings look like people who have entered heaven, the dwelling of souls who did good, without first leaving the body. The poet used the same comparison earlier in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟaivaṉ col eṉum iṉ naṟavu aruntiṉar yārum
muṟaiyiṉ niṉṟilar muntuṟu kaḷiyiṭai mūḻki,
niṟaiyum neñciṭai uvakai pōy mayir vaḻi nimira,
uṟaiyum viṇṇakam uṭaloṭum eytiṉar ottār.