கம்பராமாயணம் 1463 · அயோத்தியா 1.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூ எழு முறைமை - இருபத்தொரு தலைமுறை; எம் குலங்கள் முற்றுற - எங்கள் அரசர் குடியெல்லாம் அழியுமாறு; பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் - கூர்மை பொருந்திய மழுப்படையினால் போர் செய்து இல்லாமற் செய்த வீரனாகிய பரசுராமனது வீரத்தை; செகுத்த சேவகற்கு - கெடுத்த வீரனாகிய இராமனுக்கு; இவ் உலகம் ஆவ - இந்த உலகம் உரிமையாவதாக! ஈது அறன் என்றார் - இச்செயல் அறத்தொடு பொருந்தியதே என்று சொன்னார்கள்.
அரோ - அசை. பரசுராமனது செருக்கை அழித்தபோதே இராமனுக்கு இவ்வுலகம் தகுதியால் உரிமையாயிற்று; இதனை வெளிப்படுத்தி முடிசூட்டுதல் மிகவும் ஏற்புடைத்தே என அரசர் தம் எண்ணத்தை உவமையோடு தெரிவித்தனர். பூ - கூர்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Three times seven over, so that our royal clans were wholly destroyed,
- a warrior fought and wiped them out with his keen-edged axe;
- the warrior who crushed that warrior's valour,
- to him let this world belong; this is right," they said.
What the poem says
The kings give their reason. Paracurāmaṉ, wielding his sharp axe, had wiped out the warrior clans twenty-one times over; Irāmaṉ, on his way home from his wedding, broke that hero's pride.
In the kings' eyes, the world became Irāmaṉ's by merit at that moment, and crowning him only makes public what is already true. The verse plays on the repeated word for warrior and valour.