கம்பராமாயணம் 147 · பால 3.66

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அத்தொல்நகர் சிலர்க்கு - அந்தப் பழமை வாய்ந்த நகரத்திலே வாழும் சிலர்க்கு; ஊடவும் கூடவும் - காதலர்களோடு ஊடல் கொள்ளும் ஊடல் தீர்ந்து கூடி இன்புற்று மகிழவும், உயிரின் இன்னிசை பாடவும் - உயிரினும் சிறந்ததான இனிய இசை பாடி மகிழவும்; விறலியர் பாடல் கேட்கவும் - இசையில் வல்ல விறலியர்களைப் பாடச்செய்து, அதனைக் கேட்கவும்; ஆடவும் - இசைக்கேற்ப நடனம் ஆடவும்; அகன்புனல் ஆடி - இடமகன்ற நீர்நிலைகளிலே நீராடவும்; அம்மலர் சூடவும் பொழுதுபோம் - அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய செயல்களால் பொழுது போகும்.

ஊடுதல் - கூடி மகிழ்தல் - பாடுதல் - பாடல் கேட்டல். சூடுதல் - புனலாடல் - மலர் சூடல் ஆகிய செயல்களால் சிலருக்குப் பொழுது போகும்; போம்: போகும் என்பதன் தொகுத்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For some in that ancient city the time passes
  2. in quarrelling and making up with lovers, in singing sweet music dearer than life,
  3. in listening to the songs of skilled women singers, in dancing,
  4. in bathing in broad waters and wearing lovely flowers.

What the poem says

This verse begins a short group on how the people of Ayōttī spend their leisure. For some, the hours go in the pleasures of love: lovers' quarrels and reconciliations, singing, listening to professional women singers, dancing, bathing in the pools and putting on flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṭavum kūṭavum uyiriṉ iṉ icai
pāṭavum viṟaliyar pāṭal kēṭkavum
āṭavum akaṉ puṉal āṭi, am malar
cūṭavum poḻutu pōm cilarkku at tolnakar.