கம்பராமாயணம் 148 · பால 3.67

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முழங்கு திண் கட கரி முன்பின் ஊரவும்
எழும் குரம் அத்து இவுளியோடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர்.

பொருள் · Meaning in Tamil

முழங்கு திண் கடகரி - பிளறி முழக்கமிடும் வலிமைமிக்க மத யானைகளின் மீது; மொய்ம்பின் ஊரவும் - தமது மிகுந்த வலிமையால் ஏறி ஊர்ந்து சென்றும்; எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும் - எழுகின்ற ஆரவாரமுடைய குதிரைகளோடு தேர்களில் ஏறி ஊர்ந்து சென்றும்; பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர - வறுமைத் துன்பத்தோடு வந்து இரந்தவரது துன்பம் நீங்கிட; வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மாநகர் - வேண்டிய பொன்னும் வாரி வழங்கியும் அந்தப் பெரு நகரில் வாழும் சிலர்க்குப் பொழுது போகும்.

யானை மீதும், குதிரை மீதும், ஏறிச் சவாரி செய்தும், தேர் ஓட்டியும் வருந்தி வந்தவருக்கு வாரி வழங்கியும் சிலருக்குப் பொழுதுபோகும் என்று கூறியதால் ஆண்களுக்குப் பொழுது போக்கும் செயல்களைக் கூறினார் எனலாம். குரத்தம்: ஆரவாரம். முழங்குதல்: முழக்கமிடுதல். மொய்ம்பு: வலிமை. பழங்கண்: வறுமைத் துன்பம். தீர்தர: தீர. யானையேற்றம் - குதிரையேற்றம் - தேர் ஏற்றம் போன்றவை அரசருக்குரியவை. இளவரசர்களும் அந்நகரத்துச் செல்வ இளைஞர்களும் ய்து செயல்களைக் கூறினார் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Riding with mighty strength on roaring, powerful rutting elephants,
  2. mounting chariots drawn by horses with clattering hooves,
  3. giving freely, so that those who came begging in distress
  4. are rid of their sorrow — so passes the time for some in that great city.

What the poem says

For others, mainly the princes and wealthy young men, the day goes in manly pursuits: riding war elephants, driving chariots behind spirited horses, and giving generously to the poor who come asking.

The commentary notes that riding elephants, horses and chariots were royal accomplishments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḻaṅku tiṇ kaṭa kari moympiṉ ūravum
eḻum kurattu ivuḷiyōṭu iratam ēṟavum
paḻaṅkaṇōṭu irantavar parivu tīrtara
vaḻaṅkavum poḻutu pōm cilarkku ammānakar.