கம்பராமாயணம் 149 · பால 3.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரியொடு கரி எதிர் பொருத்தி - யானையோடு யானையை எதிர்த்துப் போர் புரியவிட்டு; கைப்படை வரி சிலை முதலிய வழங்கி - கையில் உள்ள படைகளான கட்டமைந்த வில் முதலியவைகளைப் பயின்றும்; வால் உளைப்புரவியில் - நீண்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு; பொரு இல் செண்டு ஆடி - ஒப்பற்ற “செண்டு” என்ற பந்தாடியும்; போர்க்கலை தெரிதலின் - போருக்குரிய கலைகளைத் தெரிந்து பயின்றும்; அச்சேண் நகர் - அந்தச் சிறந்த நகரத்தில்; சிலர்க்குப் பொழுதுபோம் - மற்றும் சில பேருக்குப் பொழுது போகும்.
யானையுடன் யானையை மோதவிடும் வீர விளையாட்டுகளிலும், வில் முதலிய படைப்பயிற்சி செய்வதிலும், குதிரை மீதேறிப் பந்து விளையாடுவதிலும் போருக்குரிய கலைகளைப் பயில்வதிலும் அந்நகரத்தில் சிலருக்குப் பொழுது போகும் என்றதால் இங்குக் குறிப்பிடப்படுபவர்கள் போர் வீரர்கள் என அறியலாம். பொருத்தி: பொருந்தச் செய்து (பிற வினைப் பெயரெச்சம்). உளை: பிடரிமயிர். செண்டு: குதிரையில் ஏறியாடு பந்தாட்டம் (இதனை இக்காலத்தார் “போலோ” என்பர்). தெரிதல் - அறிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Setting elephant against elephant in combat, wielding hand weapons
- such as the banded bow, playing the peerless ball game
- on horses with long manes, and learning the arts of war —
- so passes the time for some in that lofty city.
What the poem says
For a third group, clearly the warriors, leisure means training. They stage elephant fights, practise archery and other weapons, and play a mounted ball game.
The commentary compares that game to modern polo.