கம்பராமாயணம் 1475 · அயோத்தியா 1.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை - மழை மேகம் போன்ற திருமேனி உடைய இராமனைப் பெற்ற கோசலை; கண்ட மாதரை - (ஆடிப்பாடிக் கரம்சூடிச் சொல்லுவது ஓராது வந்து) தன்னைக் கண்ட அந்நான்கு பெண்களை; காதலின் - அன்பினால்; நோக்கினாள் - பார்த்து; தொண்டை வாயினிர் - ஆதொண்டைக் கனிபோன்ற சிவந்த வாயை உடைய பெண்களே! (உங்களைக் காணுங்கால்); பேர் உவகைப் பொருள் - பெரிய மகிழ்ச்சிச் செய்தி; உண்டு - இருக்கிறது (என்று தெரிகிறது); அன்னது - அப்படிப்பட்ட மகிழ்ச்சிச் செய்தியை; ஈண்டுச் சொல்லுமின் - இவ்விடத்தில் சொல்லுங்கள்; என்றாள் - என்று கேட்டாள்.
கோசலை - கோசல தேசத்தரசன் மகள். கோசலம் - இங்குத் தென் கோசலம். வந்த மங்கையர் கருதிய செய்தியை அவர்கள் கூறாமலே குறிப்பால் அறிந்தாள், அதனால் “உண்டு பேர் உவகைப் பொருள்” என்றாள் எனலாம். தன் தோழியர் ஆதலின் அன்போடு நோக்கினாள். இனி ‘இராமன் தாய்’ உலகின் தாய் ஆதலின் அனைவரையும் அன்போடு நோக்கல் அவள் இயல்பு எனினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She looked with love at the women she saw,
- Kōcalai, who gave birth to the one whose colour is the rain cloud's:
- "There is some matter of great joy; that matter,
- you whose lips are red as the toṇṭai fruit, tell me here," she said.
What the poem says
The four women reach Kōcalai, Irāmaṉ's mother, who was born a princess of the southern Kōcalam country. Before they say a word she can tell from their faces that they bring wonderful news, and she gently asks them to tell it.
Irāmaṉ is called the one who has the colour of a rain cloud, a standard epithet of Tirumāl, of whom he is the incarnation. The women's red lips are compared to the toṇṭai fruit.