கம்பராமாயணம் 15 · பால 1.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செறி நறுந்தயிரும் - தொய்ந்து இறுகிய மணம் மிக்க தயிரையும்; பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும் - பால், வெண்ணெய், சிவந்த நெய் ஆகியவற்றையும், உறியொடு வாரி உண்டு - அவற்றைத் தாங்கியிருந்த உறிகளொடு கவர்ந்து உண்டு; குருந்தொடு மருதம் உந்தி - குருந்த மரத்தோடு மருத மரத்தையும் முறித்துத் தள்ளி; மறி விழி ஆயர் மாதர் - மானின் விழி போன்ற விழிகள் உடைய இடைக்குலப் பெண்கள்; வனை துகில் - உடுத்துகின்ற ஆடைகளை; வாரும் நீரால் - ஈர்க்கின்ற (தண்ணீரால்) தன்மையால்; பொறி வரி அரவின் ஆடும் - புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட (காளியன் என்ற) பாம்பின்மேல் ஆடிய; புனிதனை மானும் - தூய கண்ண பெருமானை (அந்த சரயு வெள்ளம்) ஒத்திருக்கும்.
செறி தயிர் நறுந்தயிர் எனப் பிரித்துக் கூட்டுக. செறி தயிர் - வினைத்தொகை, நறுந்தயிர் - பண்புத் தொகை. உறியிலிருந்து தனித்தனியாக எடுக்காமல் உறியோடு மொத்தமாகக் கவர்ந்த செயலை 'உறியொடு' என்ற சொல்லாட்சி குறித்தது. மறிவிழி மருளுதலைக் குறித்தது. வனை துகில்; வினைத்தொகை. வனைதல் அழகுற அணிதல். அரவின் ஆடியது - காளிங்க நர்த்தனக் கதை குறித்தது. 'இயல்பிலேயே' குற்றத்தின் நீங்கியவனாதலின் கண்ணனைப் புனிதன் என்றார்.
புராணச் செய்திகளைக் கற்பனை உத்தியாகக் கொள்வதை இக்காலத் திறனாய்வாளர் 'தொன்மம்' என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thick, fragrant curds and milk and butter and ruddy ghee
- it swept up with their hanging slings and swallowed; it pushed down the kuruntam and the marutam trees;
- and since its waters carry off the fine garments of the doe-eyed cowherd girls,
- it was like the Pure One who danced upon the spotted, striped serpent.
What the poem says
Passing through the pastoral country of the cowherds, the flood is likened to the young Kṛṣṇa, whose boyhood pranks it repeats one by one. Like him it steals curds, milk, butter and ghee, taking even the rope slings the pots hang in. It knocks down the kuruntam and marutam trees, which Kṛṣṇa broke in the old stories. It carries off the clothes of the cowherd girls, as Kṛṣṇa hid the garments of the bathing gopīs.
Kṛṣṇa is called "the Pure One" because he is by nature free of fault. The dance on the serpent recalls his subduing of the poisonous snake Kāḷiya.