கம்பராமாயணம் 1500 · அயோத்தியா 2.17

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வையம் - உலக மக்கள்; மன் உயிர் ஆக - நிலைத்த உயிராக; அம்மன் உயிர் - அந்த நிலைத்த உயிர்களை; உய்ய - வாழும்படி; தாங்கும் - சுமக்கின்ற; உடல் அன்ன மன்னனுக்கு - உடம்பை ஒத்த அரசனுக்கு; ஐயம் இன்றி - மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம் இல்லாமல்; அறம் கடவாது அருள் மெய்யில் நின்றபின் - அறத்தை விட்டு விலகாது அருளிலும், சத்தியத்திலும் நிலைபெற்று நின்ற பிறகு; வேள்வியும் வேண்டுமோ - யாகங்களும் செய்தல் வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி.)

அரசர்கள் பெரிய இராயசூயம், வாஜபேயம், அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்தல் வேண்டும் என்பார். ஆயினும், அறம், அருள், சத்தியம் என்ற மூன்றிலும் நிலைத்து நின்று அரசாட்சி செய்யின் அதுவே யாகமாம்; வேறு யாகம் செய்யவேண்டுவது இல்லை என்றாராம். “செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ், உயிர் எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்” (177) என்று தயரதனைப் பற்றி முன்னர்க் கூறியவாறு, மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் கூறுவது கம்பரின் முடியரசில் குடியரசுக் கொள்கையாம். சங்ககாலத்தில் “நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், அதனால், யான் உயிர் என்பது அறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்று மக்களை உடலாகவும், மன்னனை உயிராகவும் கருதிக் கூறும் கொள்கை நிலைபெற்றதைக் காணலாம். (புறநா. 186.) உயிர் இல்லாத வழி உடல் இயங்காமை போல மக்கள் இல்லாதவழி மன்னனுக்கு வேலை இல்லை என்பது கம்பர் கருத்து. மக்களுக்காக மன்னவனே அன்றி மன்னனுக்காக மக்கள் அல்லர் என்னும் இக்கருத்தே சாலப் பொருத்தம் உடையது. அறம், அருள் சத்தியம் இல்லாதவன் யாகம் செய்வது வீண் ஆரவாரமேயன்றி வேறன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The world being the enduring life, and the king
  2. being like the body that bears that enduring life so that it may thrive:
  3. once he stands, without doubt, never straying from dharma, in grace
  4. and in truth, need he perform sacrifices as well?"

What the poem says

Kings were expected to perform grand Vedic sacrifices such as the royal consecration and the horse sacrifice. Vacittaṉ says that a king who holds steadily to righteousness, compassion and truth needs no other sacrifice; his just rule is itself the offering.

The verse calls the people the life and the king the body that carries it. An earlier Tamil anthology poem said the opposite, that the king is the life of the world. Kampaṉ's reversal makes the king exist for the people, not the people for the king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaiyam maṉ uyir āka, am maṉ uyir
uyyat tāṅkum uṭal aṉṉa maṉṉaṉukku,
aiyam iṉṟi aṟam kaṭavātu aruḷ
meyyil niṉṟapiṉ vēḷviyum vēṇṭumō?'