கம்பராமாயணம் 1501 · அயோத்தியா 2.18

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(ஓர் அரசன்) இனிய சொல்லினன் - (கேட்டார்க்கு) இனிமை பொருந்தச் சொல்லும் இன்சொல் உடையவன்; ஈகையன் - நல்ல கொடைத்திறம் உள்ளவன்; எண்ணினன் - ஆராய்ச்சி உடையவன்; வினையன் - முயற்சி உடையவன்; தூயன் - தூய்மையானவன்; விழுமியன் - சிறந்தவன்; வென்றியன் - வெற்றி உடையவன்; நினையும் நீதிநெறி கடவாதவன் - ஆராய்ந்து அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன்; எனில் - என்றால்; அனைய மன்னற்கு - அப்படிப்பட்ட அரசனுக்கு; அழிவும் உண்டாம்கொலோ? - கேடும் உண்டாகுமோ? (உண்டாகாது).

“இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு”, “கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ் செல்வம், நீடின்றி ஆங்கே கெடும்” என்பனவற்றை (குறள். 387, 566.) இதனுடன் ஒப்பிடுக. ஈகை - வறியராய் வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்னாது கொடுத்தல். எண் - தான் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்தல்; காலமும், இடனும், வலியும் அறிதலும்; கொடுத்தல், இன்சொல் சொல்லுதல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என்னும் நால்வகை உபாயமும் தெரிந்து செயலும் இதனுள் அடங்கும். வினை என்பது அரசர்க்குரிய போர்த் தொழிலின்கண் ஊக்கம். மேற்சேறல் அரண்முற்றல், கோடல், பொருதல், வேறல் என்பனவாம். நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்பனவும் ஆகும். எனவே இவற்றை அறிதற்கும், செய்தற்கும் இடைவிடாத மெய்ம்முயற்சி உடையனாதல் வேண்டும் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Sweet of speech, open-handed, thoughtful,
  2. energetic, pure, noble, victorious,
  3. never straying from the path of justice he has weighed: if a king is so,
  4. could ruin ever come to such a king?"

What the poem says

Vacittaṉ lists the qualities that make a king secure: kind speech, generosity to those in need, careful thought before acting, including the four classic methods of gifts, kind words, dividing enemies and punishment, energy in war and diplomacy, purity, excellence, success and steady justice.

A king with all of these can never be ruined. Two Tirukkuṟaḷ couplets make the matching points: the world submits to a king who gives with kind words, while a harsh-tongued, unseeing king soon loses his wealth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉiya colliṉaṉ, īkaiyaṉ, eṇṇiṉaṉ,
viṉaiyaṉ, tūyaṉ, viḻumiyaṉ, veṉṟiyaṉ,
niṉaiyum nīti neṟi kaṭavāṉ, eṉil,
aṉaiya maṉṉaṟku aḻivum uṇṭāmkolō?'