கம்பராமாயணம் 1502 · அயோத்தியா 2.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சீலம் அல்லன நீக்கி - நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி; செம்பொன் துலைத் தாலம் அன்ன - சிவந்த பொன்னை நிறுத்துகின்ற தராசினது நடுநாவை ஒத்த; தனிநிலை - ஒப்பற்ற நடுவு நிலைமையை; தாங்கிய - உடைய; ஞால மன்னற்கு - உலகை ஆளும் அரசனுக்கு; நல்லவர் - அமைச்சர்கள்; நோக்கிய - ஆராய்ந்துரைத்த; காலம் அல்லது - பொழுது அல்லாமல்; கண்ணும் உண்டாகுமோ? - வேறு கண்ணும் உண்டாகுமோ? (இல்லை).
நடுவு நிலைமை - பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார் கண்ணும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. தாலம் - தாலு - நாக்கு. துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு. நடுவு நிலைமைக்குத் துலாக்கோல் உவமையாதல் “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற், கோடாமை சான்றோர்க் கணி” என்பதிற் (குறள். 118) காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின் ‘செம்பொன் துலை’ என்றார். நல்லவர் - இங்கு அமைச்சர். ‘காலமறிதல்’ என்னும் திருக்குறள் அதிகாரத்தின்கண் ‘காலம்’
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Casting off all that is not virtuous, holding, like the tongue of the scale
- on which red gold is weighed, a balance without equal:
- for such a king of the world, apart from the time the wise have studied,
- is there any other eye?"
What the poem says
A king must be impartial, treating enemies, strangers and friends alike, like the needle of a goldsmith's balance, which must be perfectly true because gold is weighed so precisely. The Tirukkuṟaḷ also compares the just man to a balance that does not tilt.
For such a king, the right moment for action, as determined by his wise ministers, is his eye: he should act only when they judge the time is ripe.