கம்பராமாயணம் 1505 · அயோத்தியா 2.22

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தத்துவம் நண்ணினான் - மெய்ப்பொருள் உணர்வில் நெருங்கியவனாகிய வசிட்டன்; வையகம் போனகற்கு - உலகத்தை உண்டு வயிற்றகத்தடக்கி காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு; இனையன ஏனை நீதியும் - இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும்; விளம்பி - சொல்லி; புலன்கொளீஇ - அறிவு கற்பித்து; ஆனவனொடும் - அவனுடனே; ஆயிர மௌலியான் - ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது; தானம் - திருக்கோயிலை; நண்ணினான் - சென்றடைந்தான்.

ஊழியிறுதியில் உலகம் உண்ட பெருவாயன் ஆதலின் திருமாலை ‘வையகப் போனகன்’ என்றார்; “உலகு யாவையும் மன் வயிற்றின் அடக்கிய மாயனை” என்று முன்னர்க் (1406) கூறியது காண்க. இதுவரை 15 பாடல்களால் கூறியனவற்றையும், இதுபோன்ற நீதிகளையும் உள்ளடக்கி ‘இனையன ஏனை நீதி’ என்று அடக்கி கூறினார். தத்துவம் என்பது மெய்யுணர்வு. அஃதாவது, பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல் என திருக்குறள், மெய் உணர்தல் (அதி. 30) என்னும் அதிகாரத்து முகவுரையில் பரிமேலழகர் உரைத்தவாற்றான் அறிக. அங்ஙனம் உணர்ந்தவன் ஆதலின், வசிட்டன் இராமனையும் பரம்பொருள் என உணர்ந்தவனே, ஆயினும், அவன் கொண்ட வேடத்திற்கு ஏற்ப உபதேசித்தான் என்று உணர்த்தவே ஈண்டுத் ‘தத்துவம் நண்ணினான்’ என்றார். ஆயிரம் மௌலி என்றது அளவிறந்த திருமுடிகள் என்னுங் கருத்தில் கூறியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Other precepts like these he declared to him who swallows
  2. the world, and made him take them to heart;
  3. then, together with him, to the shrine of the one with a thousand crowns
  4. went he who had attained the truth.

What the poem says

Vacittaṉ concludes his long counsel with more teachings of the same kind, and then takes Irāmaṉ to the temple of Tirumāl, the god of a thousand crowns, meaning countless crowns.

The poet calls Irāmaṉ "the one who swallows the world", a title of Tirumāl, who swallows the universe at the end of an age. Vacittaṉ is called one who has attained the truth: he knows Irāmaṉ is the Supreme in human form, yet he instructs him as suits the role the god has taken on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṉai nīti iṉaiyaṉa, vaiyakam
pōṉakaṟku viḷampi, pulaṉ koḷī i,
āṉavaṉoṭum, āyira mauliyāṉ
tāṉam naṇṇiṉaṉ, tattuvam naṇṇiṉāṉ.