கம்பராமாயணம் 1508 · அயோத்தியா 2.25

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏவின வள்ளுவர் - (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்; இராமன் -; நாளையே - நாளைக்கே; பூமகள் கொழுநனாய் - நிலமகள் கணவனாய்; மௌலி புனையும் - மகுடம் சூடுவான்; (ஆதலால்) இக்கோநகர் - இந்தத் தலைமை நகரத்தை; அணிக - அலங்கரிக்க; என - என்று சொல்லி; கொட்டும் - முழக்குகின்ற; பேரி - முரசத்தை; அத்தேவரும் களிகொள - விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள; திரிந்து - நகர் எங்கும் சுற்றி; சாற்றினார் - அடித்து முழக்கினார்கள்.

வள்ளுவர் பறையறைந்து முடிசூட்டுவிழாச் செய்தியைத் தெரிவித்தனர். தேவர் களிகொள்ளல் அரக்கர் குலம் அழியச் சமயம் அணுகியது என்பதால் ஆகும். பேரி - பெருமுரசு. கோநகர் - தலைநகர்; அரசு வீற்றிருக்கின்ற நகரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heralds sent out cried, "Irāmaṉ, this very tomorrow,
  2. as husband of the Earth Lady, will put on the crown: this
  3. royal city, adorn it!" and beating the great drum, while
  4. even the gods rejoiced, they went about proclaiming it.

What the poem says

The royal heralds go through the city beating the great drum and announcing that Irāmaṉ, as husband of the Earth goddess, will be crowned tomorrow, and that the capital must be decorated.

Even the gods rejoice. As the commentary explains, they see that the moment is approaching when the race of the demons will be destroyed, which is why Tirumāl took birth as Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēviṉa vaḷḷuvar, `'irāmaṉ nāḷaiyē
pūmakaḷ koḻunaṉāy puṉaiyum mauli; ik
kō nakar aṇika'' eṉak koṭṭum pēri, at
tēvarum kaḷi koḷa, tirintu cāṟṟiṉār.