கம்பராமாயணம் 151 · பால 3.70

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் - அந்நகரின் குறைவில்லாத மாடங்களின் மீது ஆடுகின்ற கொடிகள்; நானாவிதமா நளி மாதிர வீதி ஓடி - நாலாவிதமாகவும் பறந்து பெரிய வான வீதியிலே ஓடி; மீன் நாறு வேலைப்புனல் - மீன் நாறும் கடல் நீரினை; வெண் முகில் உண்ணுமா போல - வெண்மை நிறமுடைய மேகங்கள் பருகுவது போல; மீப் போய் - மேலே சென்று; வான் ஆறு நண்ணி - வானாறாகிய ஆகாய கங்கையை அடைந்து; புனல்வற்றிட நக்கும் - அதன் தண்ணீர் வற்றும்படி நக்கும்.

அந்த நகரத்து மாடங்களின் மீது ஆடும் கொடிகள் வானவீதியிலே மேலே சென்று மேகங்கள் கடல் நீரைப் பருகுவது போல ஆகாய கங்கையின் நீர் வற்றும்படி நக்கும் என்றார். நானா விதமா: நாலா விதங்களிலும். ஆனாத: குறையாத. மீப் போய்: மேலே சென்று. வானாறு: ஆகாய கங்கை. மன்னோ: அசை. கொடிகளின் சிறப்பை உயர்த்திக் கூறியதால் உயர்வு நவிற்சி அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Running every which way along the broad streets of the sky,
  2. like white clouds drinking the fish-smelling water of the sea,
  3. the banners that wave on the countless towers rise high
  4. and reach the river of heaven, and lick it until its water runs dry.

What the poem says

The banners on Ayōttī's mansions stream up into the sky. They reach the Ākāśa Gaṅgā, the river of heaven that Indian tradition sees in the Milky Way.

They lap at its water the way clouds drink from the sea, until it runs dry. The hyperbole conveys how tall the towers are and how many banners fly from them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṉā vitamā naḷi mātira vīti ōṭi,
mīṉ nāṟu vēlaip puṉal veṇ mukil uṇṇumāpōl,
āṉāta māṭattiṭai āṭu koṭikaḷ mīp pōy,
vāṉ āṟu naṇṇi, puṉal vaṟṟiṭa nakkum maṉṉō!