கம்பராமாயணம் 152 · பால 3.71

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் எனச் செம்பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின உம்பர் நாண.

பொருள் · Meaning in Tamil

வன் தோரணங்கள் புணர் வாயிலும் - வன்மையான தோரணங்கள் பொருந்திய வாயில்களும், செம்பொன் இஞ்சி ஒன்றோடிரண்டும் - செம்பொன்னால் அமைந்த மதில்கள் ஒன்றோடிரண்டாகிய மூன்றும்; வானின் உம்பர் சென்று ஓங்கி - வானத்தின் மேலே சென்று உயர்ந்து; மேல் ஓர் இடம் இல் என - அதற்கு மேலே செல்ல ஒரு இடமும் இல்லை என்பதால்; குன்று ஓங்கு தோளோர் - மலை போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின்; குணம் கூட்டு இசைக் குப்பை என்ன - சிறந்த குணங்களுடன் கூடிய நட்புள்ளம் புகழ்த் தொகுதி ஆகிய நல்ல பண்புகள் உயர்ந்திருப்பது போல; ஓங்கல் நாண உயர்ந்தோங்கின - வாயில் மதில் ஆகியவைகளின் உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

‘இஞ்சி ஒன்றோடிரண்டு’ என்பதற்கு அக நகர், இடை நகர், புறநகர் மதில்கள் மூன்று என்பது கருத்து. கூட்டு: நட்பு. இசைக்குப்பை: புகழ்த் தொகுதி. ஓங்கல்: மலை. இஞ்சி: மதில். 70, 71 இரண்டு பாடல்களாலும் கொடிகளும், தோரண வாயிலும் சிறப்பித்துக் கூறப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gateways joined to strong archways, and the walls of red gold,
  2. one and two more, soared up beyond the sky
  3. as if there were no place left above, like the heaped fame and fellowship
  4. and virtues of the men with hill-high shoulders, so that the mountains were ashamed.

What the poem says

The city's gateways and its three concentric ramparts of gold, around the inner, middle and outer city, rise so high that there is nowhere further up for them to go. Mountains feel ashamed beside them.

Their height is compared to the towering fame and goodness of Ayōttī's broad-shouldered men. With this verse the description of the banners and gateways ends.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ tōraṇaṅkaḷ puṇar vāyilum vāṉiṉ umpar
ceṉṟuōṅki mēlōr iṭam il eṉac cem poṉ iñci
kuṉṟu ōṅku tōḷōr kuṇam kūṭṭu icaik kuppai eṉṉa
oṉṟōṭu iraṇṭum uyarntu ōṅkiṉa ōṅkal nāṇa.