கம்பராமாயணம் 1511 · அயோத்தியா 2.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருத்தி மாக்கள் - அன்புடைய அயோத்தி நகர மக்கள்; திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல் - நெருங்கிய கதிர்களையுடைய சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப் போலவும்; பணியிடைப் பள்ளியான் - பாம்பின் இடையே படுத்துறங்கும் திருமாலின்; பரந்த மார்பிடை - அகன்ற மார்பின் நடுவில் அமைந்த; மணியினை - கௌஸ்துப மணியினை; வேகடம் வகுக்குமாறுபோல் - சாணை பிடித்து மாசு போக்குதலைப் போலவும்; அணிநகர் அணிந்தனர் - முன்பே அழகுற உள்ள அயோத்திநகரை மேலும் அலங்கரித்தார்கள்.
இயல்பாகவே அழகான அயோத்திநகரை மீண்டும் அழகு செய்தலை இரண்டு உவமைகளால் விளக்கினார். ஒளியுடைய சூரியனை மேலும் திருத்துதலையும், கௌஸ்துப மணியைப் பட்டை தீட்டி ஒளியூட்டுதலையும் போல என்பதால், அவை இரண்டும் போல அயோத்தியும் இயற்கையாகவே அழகுடையது என்றாயிற்று. வேகடம் - சாணைபிடித்தல். அருத்தி - அன்பு. ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though one were burnishing the sun with its dense rays,
- as though one were polishing on the grindstone the gem
- on the broad chest of him who sleeps upon the serpent,
- so the loving people adorned the already lovely city.
What the poem says
The people decorate Ayōtti, though it is beautiful already. The poet gives two images for adding beauty to the beautiful: polishing the blazing sun, and cutting and polishing the Kaustubha jewel that shines on the chest of Tirumāl as he lies on his serpent couch.
Both images imply that the city's splendour was natural before any decoration was added.