கம்பராமாயணம் 1512 · அயோத்தியா 2.29

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெள்ளிய - வெண்மையானவை; கரியன - கருமையானவை; செய்ய - செம்மையானவை; வேறு உள - வேறு பல நிறமானவை ஆக; கொள்ளை - மிகுதியான; வான் - பெரிய; கொடி நிரைக் குழாங்கள் - கொடி வரிசைக் கூட்டங்கள்; தோன்றுவ - நகரில் தோன்றுகின்றன (அவை); கள் அவிழ் கோதையான் - மதுவிரியும் மாலையணிந்த இராமனது; செல்வம் - முடிசூட்டு விழாச் செல்வத்தை; காணிய - காண விரும்பி; புள் எலாம் - பறவைகள் எல்லாம்; திருநகர் - அயோத்தியில்; புகுந்த போன்ற - நுழைந்தவை போன்றுள்ளன.

பலவகை நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றதைப் பறவைகள் நகரிற் புகுந்தனபோல் என வருணித்தார். ‘தோன்றுவ’ படுத்தல் ஓசையாற் பெயராயிற்று. ‘ஏ’காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. White ones, black ones, red ones, and others of other hues:
  2. the vast, crowding rows of banners that appeared
  3. looked as if every bird had flocked into the fair city
  4. to see the glory of him whose garland drips with honey.

What the poem says

Flags of every colour, white, black, red and more, are strung in rows all over the city.

The poet imagines them as flocks of birds of every kind that have flown into Ayōtti to watch the splendour of Irāmaṉ's coronation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷḷiya, kariyaṉa, ceyya, vēṟu uḷa,
koḷḷai vāṉ koṭi niraik kuḻāṅkaḷ tōṉṟuva,
kaḷ aviḻ kōtaiyāṉ celvam kāṇiya
puḷ elām tirunakar pukunta pōṉṟavē.