கம்பராமாயணம் 1514 · அயோத்தியா 2.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புதவ ராசி - கோபுர வாயிற் கதவுகளின் வரிசைத் தொகுதிகள்; காலையில் கதிரவன் - காலைப்பொழுதில் உள்ள இளஞ்சூரியன்; முடுகி - விரைந்து சென்று (நண்பகலில்); வேறு ஒரு கவின் கொண்டான் - வேறுபட்ட ஓர் அழகைக் கொண்டனன்; என - என்று சொல்லும்படி; மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் - சந்திரனைத் தொடும்படி உயர்ந்த மகரமீன் வடிவமாகச் செய்யப்பெற்ற தோரணங்கள்; முதிர் ஒளி உயிர்த்தன - மிக்க சோபையை வீசினவாய்; புதியன - புதியனவாய்; அலர்ந்தன - விளங்கப்பெற்றன.
கோபுர வாயிற் கதவுகளில் மகரதோரணங்கள் புதியனவாய்க் கட்டப் பெற்றமையை வருணித்தார். புதவம் - கதவு. புதா என்பது புதவு என ஆகி புதவம் என அம் சாரியை பெற்றது. “குறியதன் கீழ் ஆக்குறுகலும் அதனோடு உகரம் ஏற்றலும்” (நன். 172) என்பது இலக்கணவிதி. செஞ்சூரியனாகிய உதய சூரியன் நண்பகலில் வெள்ளொளி விரித்தல் வெளிப்படை. ‘ஏ’காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Breathing out a full-grown light, as though the morning sun, hastening on,
- had taken on another kind of beauty,
- makara arches, rising so high they touched the moon,
- blossomed new over the rows of gateways.
What the poem says
New ornamental arches, shaped like the makara, a mythical sea creature, are raised over the city gates, so tall they seem to touch the moon.
Their brilliance is compared to the sun as it moves from its red dawn colour to the white glare of noon, as if the morning sun had hurried on and put on a new kind of beauty.