கம்பராமாயணம் 1517 · அயோத்தியா 2.34

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆடல் மான் - பல்விதமான செலவுகளினால் நடனம் இடுவது போன்ற குதிரைகள் பூட்டப்பெற்ற; தேர்க் குழாம் - தேர்த் தொகுதிகள்; அவனி காணிய - மண்ணுலகினைக் காணும் பொருட்டு; வீடு எனும் உலகின் வீழ் - சுவர்க்கம் என்கின்ற உலகத்திருந்தும் இறங்கிய; விமானம் போன்றன - விமானத்தை ஒத்தன; ஓடை மாக் கட களிறு - முகபடாம் அணிந்த பெரிய மதம் உடைய யானைகள்; உதய மால் வரை - பெரிய உதயமலை; தேட அருங்கதிரொடும் - ஒப்புச் சொல்லுதற்கரிய சூரியனோடும்; திரிவ போன்ற - நகர வீதிகளில் திரிவனவற்றை ஒத்திருந்தன.

வீதிகளில் குதிரை பூட்டிய தேர்களையும், முகபடாம் அணிந்த யானைகளையும் விமானம் ஆகவும், உதய மலையாகவும் வருணித்தார். ஐங்கதி உடைமையால் ஆடல்மான் என்றார். ஐந்து கதியாவன: மல்ல கதி, மயூர கதி, வியாக்கிர கதி, வானர கதி, இடப கதி என்பன. பல்வேறு வகையான ஓட்டங்களை இங்கே ஆடல் என்றார். ‘ஏ’காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The throngs of chariots drawn by dancing horses were like aerial cars
  2. come down from the world called heaven to look upon the earth;
  3. the great rutting elephants in their forehead plates were like the vast mountain of sunrise
  4. wandering about together with the incomparable sun.

What the poem says

Decorated chariots and elephants fill the streets. The chariots, drawn by horses trained in the five classical gaits, which look like dancing, seem like celestial cars that have come down from heaven to see the earth.

The elephants, with their golden face ornaments shining, look like the eastern mountain where the sun rises, walking around with the sun still on its peak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭal māṉ tērk kuḻām, avaṉi kāṇiya,
vīṭu eṉum ulakiṉ vīḻ vimāṉam pōṉṟaṉa;
ōṭai māk kaṭa kaḷiṟu, utaya māl varai
tēṭa aruṅ katiroṭum tiriva pōṉṟavē.